AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறை பட அனிஷிமா அனில்குமாரின் அடுத்த திரைப்படம்… ஹீரோ யார் தெரியுமா?

Anishima Anilkumar New Movie: சிறை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பிரபலமான இளம் நடிகையாக இருந்துவருபவர் அனிஷிமா அனில்குமார். இவர் தற்போது புதிதாக படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் யார் ஹீரோ என விவரமாக பார்க்கலாம்.

சிறை பட அனிஷிமா அனில்குமாரின் அடுத்த திரைப்படம்… ஹீரோ யார் தெரியுமா?
அனிஷ்மா அனில்குமாரின் மொத ராத்திரி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 May 2026 16:43 PM IST

மலையாள சினிமாவில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவந்தவர் நடிகை அனிஷிமா அனில்குமார் (Anishima Anilkumar). இவர் மலையாளத்தில் தொடர்ந்து புதிய படங்களில் நடித்துவந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார். கடந்த 2025ம் ஆண்டின் இறுதியில் வெளியான சிறை (Sirai) என்ற படத்தில், அறிமுக நடிகர் அக்ஷய் குமார் என்பவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது நடிகர் விக்ரம் பிரபுவின் (Vikram Prabhu) 25வது திரைப்படம் என்ற நிலையில், அதில் மிகவும் முக்கியமான வேடத்தில் அனிஷிமா அனில்குமார் நடித்திருந்தார். இடத்தியடுத்து கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியான யூத் படத்திலும் (Youth), கென் கருணாஸிற்கு (Ken Karunaas) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

தற்போது மூன்றாவதாக தமிழ் படம் ஒன்றில் ஒப்பந்தமாகி, நடித்துவருகிறார். தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் இயக்கவுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு “மொத ராத்திரி” என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இணையத்தில் கவனம் பெறும் காவியக் காதல் படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ

அனிஷிமா அனில்குமாரின் 3வது தமிழ் திரைப்படம் அறிவிப்பு குறித்த பதிவு:

இந்த மொத ராத்திரி திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி என்பவர் இயக்கிவருகிறார். இந்த படத்தில் நடிகை அனிஷிமா அனில்குமார் கதாநாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகர் ரிஷிகாந்த் நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே, பிரியங்கா மோகனின் நடிப்பில் வெளியான மேட் இன் கொரியா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் என்பவர் இசையமைத்துவருகிறார். இப்படமானது ரொமேன்டிக் மற்றும் காமெடி கதைக்களத்தில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரு ஓஜி லோகேஷின் படமாக இருக்கும்.. அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ரத்னகுமார்!

அந்த வகையில் இப்படத்திற்கு வித்தியாசமாக மொத ராத்திரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கிறது. அந்த வகையில் இப்படமானது இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் நிறைவடையுள்ள நிலையில், இப்படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us