கலைஞர் கனவில் கூட நினைத்து இருக்க மாட்ட்டார் – வைரலாகும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பதிவு
Director Ram Gopal Varma X Post Is Viral On Social Media : தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் வெளியிடும் சமூக வலைதள பதிவுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குநர் ராம் கோபால் வர்மா பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாவது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுவதன் மூலமாகவும் மக்களிடையே கவனத்தை பெற்று வருகிறார். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 2026-ம் ஆண்டில் வெற்றிப் பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கு பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் அனைவரும் நடிகர் தளபதி விஜய்க்கு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் அவர்கள் மட்டும் இன்றி பான் இந்திய பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




தளபதி விஜய் வெற்றி… சர்ச்சை பதிவை வெளியிட்ட ராம் கோபால் வர்மா:
அனைத்து பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் சிறு வயதில் தளபதி விஜய் கலைஞர் கருணாநிதி உடன் இருக்கும் பழையப் புகைப்படத்தை வெளியிட்டு அதில் தனக்குப் பின்னால் இருக்கும் அந்தக் குழந்தை ஒரு நாள் தன் கட்சியை அழிக்கும் என்று கலைஞர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்று தெரிவித்து உள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கோலிவுட் முதல் பாலிவுட் வரை… தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்
இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kalaingar wouldn’t have dreamed that the kid behind him would one day destroy his party 🙏👍🔥 pic.twitter.com/7NNp6Ge73S
— Ram Gopal Varma (@RGVzoomin) May 5, 2026
Also Read… SA Chandrasekhar: விஜய் நிச்சயம் மக்களுக்காக பெரிய மாற்றத்தை கொண்டுவருவார் – எஸ்.ஏ.சந்திரசேகர்!