AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் எப்படி இருக்கும்? வைரலாகும் வீடியோ

Jana Nayagan Movie Title Card Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக உருவான படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் வெளியீட்டின் போது விஜயின் பெயர் எப்படி இருக்கும் என்று இணையத்தில் வீடியோ வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் எப்படி இருக்கும்? வைரலாகும் வீடியோ
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 May 2026 13:22 PM IST

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் தற்போது அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். தளபதி விஜய் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் எச். வினோத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்பெறுவதற்கு முன்னதாக வெளியிட வேண்டும் என்று படக்குழு ஜனவரி மாதமே படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்காமல் படம் வெளியாவது தள்ளிப்போனது. தொடர்ந்து சென்சார் பிரச்சனை எப்போது முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த போது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக படம் முழுவது இணையத்தில் கசிந்தது படக்குழுவினர் மற்றும் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் படத்தின் சென்சார் பிரச்சனை தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் டைட்டில் கார்ட் எப்படி இருக்கும் என்று இணையத்தில் வீடியோ வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் எப்படி இருக்கும்?

அதன்படி முன்னதாக இந்த ஜன நாயகன் படம் வெளியாகி இருந்தால் படத்தின் டைட்டில் கார்டில் தளபடி விஜய் நடிக்கும் ஜன நாயகன் என்று வந்து இருக்கும் ஆனால் தற்போது விஜய் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதன் காரணமாக தற்போது ஜன நாயகன் படம் வெளியாகும் போது மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் விஜய் என்று வரும் என வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தளபதி விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… TVK Vijay: சொகுசு கார்கள்.. ரியல் எஸ்டேட் உட்பட.. தவெக தலைவர் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

Follow Us