AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரையரங்குகளில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கர படம்… கொண்டாடும் படக்குழு

Kara Movie New Promo Video: தமிழ் சினிமாவில் கடந்த 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கர. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படக்குழு புதிய புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

திரையரங்குகளில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கர படம்… கொண்டாடும் படக்குழு
கரImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 May 2026 17:08 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். தொடர்ந்து பிசியனா நடிகராக அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதல் படமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது கர படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த கர படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். படம் வெளியான உடனே படத்தைப் பார்த்த மக்கள் இயக்குநர் விக்னேஷ் ராஜா கர படத்தில் தனுஷின் கதாப்பாத்திரம் மட்டும் இன்றி நடிகர்கள் ஒவ்வொருவரின் கதாப்பாத்திரத்தையும் மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார் என்று பாராட்டி இருந்தனர்.

மேலும் நடிகர் தனுஷ் உடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ள நிலையில் படத்தில் அவரது இசை மற்றும் பிஜிஎம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அதனை ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

கர படத்தின் புதிய புரோமோவை வெளியிட்ட படக்குழு:

இந்த நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்களை கடந்துள்ளது. இந்தப் படத்தினை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இரண்டு நாட்களில் அதிக அளவில் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி வருவதையும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… கருப்பு படத்தில் நடித்ததையே மறந்துவிட்டேன்… ரசிகருக்கு கியூட்டாக பதிலளித்த த்ரிஷா கிருஷ்ணன்

கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆச்சாலே மச்ச மக்கமாலே.. ஒரு வருடத்தை கடந்தது சசிகுமார் – சிம்ரனின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம்!

Follow Us