AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனநாயகன் பட லீக் விவகாரம்.. கைதான 9 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Jana Nayagan Leak Case: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயகன் பட லீக் விவகாரம்.. கைதான 9 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஜனநாயகன் பட லீக் விவகாரத்தில் ஜாமீன் மறுப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 02 May 2026 16:46 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் விவகாரம் தொடர்பாக படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாவது தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் அடுத்தடுத்து எழத் தொடங்கியது. இதனால் தற்போது வரை ஜனநாயகன் படம் வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து, மறுநாளே ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக, ஜனநாயகன் படத்தை தயாரித்த நிறுவனமான கே.வி.என். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 9 பேர் கைது

அதன் பேரில், போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், எடிட்டர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கைதான 9 பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சனிக்கிழமை ( மே 2 ) நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி 9 பேரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் சலசலப்பு.. தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே வெடிக்கும் சலசலப்பு, அதிகாரப் போட்டி..

9 பேருக்கு ஜாமீன் மறுத்த சென்னை நீதிமன்றம்

இதில், ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், இந்த படத்தை தயாரித்த கே. வி. என். நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாலும் இந்த வழக்கில் கைதான 9 பேருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகன் படம் வெளியிடுவது தொடர்பாக ஆரம்பத்தில் சென்சார் வாரியம் தனது கருத்தை தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, சென்சார் விவகாரம் நீடித்து வந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

தொடர் சிக்கலில் ஜனநாயகன் படம்

இதனால், அரசியல் சார்ந்த படம் என்பதாலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்திருக்கும் படம் என்பதாலும் தேர்தல் நேரத்தில் வெளியிடக்கூடாது என்பது போன்ற கருத்து எழுந்தது. இதனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் படம் இணையத்தில் வெளியாகி கைது வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Tamilnadu Weather: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகும் கனமழை!

Follow Us