AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் சலசலப்பு.. தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே வெடிக்கும் சலசலப்பு, அதிகாரப் போட்டி..

தேர்தல் பிரசாரத்தின் போது பல தொகுதிகளில் திமுகவினருக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. திமுக வேட்பாளர்கள் நின்ற இடங்களில் கூட்டணிக் கட்சியினர் தீவிரமாக உழைத்ததாகவும், ஆனால் கூட்டணிக் கட்சியினர் நின்ற தொகுதிகளில் திமுகவின் உள்ளூர் நிர்வாகிகள் மெத்தனமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

திமுக கூட்டணியில் சலசலப்பு.. தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே வெடிக்கும் சலசலப்பு, அதிகாரப் போட்டி..
திமுக கூட்டணியில் சலசலப்பு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 May 2026 13:59 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் புகைச்சல்கள் ஆரம்பமாகியுள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினாலும், சில கருத்துக்கணிப்புகள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், தவெக இரட்டை இலகத்தில் வெற்றி பெறும் எனவும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த குழப்பத்திற்கு மத்தியில் திமுக கூட்டணியில், தொகுதிப் பங்கீடு முதல் தேர்தல் களப்பணிகள் வரை பல விவகாரங்களில் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்கள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க: தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறத் துடிக்கும் விஜய்.. புதிய வியூகம் வகுத்த தவெக..

இடதுசாரிகளின் அதிருப்தி:

கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தத் தேர்தலில் திமுக தங்களை நடத்திய விதம் குறித்து வெளிப்படையாகவே வருத்தம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க திமுக மறுத்துவிட்டது” என்று குற்றம் சாட்டினார். குறைந்தபட்சம் தலா 6 இடங்களை எதிர்பார்த்த இடதுசாரிகளுக்கு திமுக தலைமை இடம் கொடுக்காதது, இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட விரிசல்:

கடந்த தேர்தல்களை விட இந்த முறை திமுக அதிக இடங்களில் (சுமார் 180+) நேரடியாகப் போட்டியிட்டது. இது கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. குறிப்பாக, செல்வாக்குள்ள தொகுதிகளைக் கூட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முன்வராதது, ‘பெரியண்ணன் மனப்பான்மை’யைக் காட்டுவதாக விசிக மற்றும் காங்கிரஸ் தரப்பிலும் முணுமுணுப்புகள் எழுந்தன.

களப்பணியில் ஒருங்கிணைப்பு இன்மை:

தேர்தல் பிரசாரத்தின் போது பல தொகுதிகளில் திமுகவினருக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. திமுக வேட்பாளர்கள் நின்ற இடங்களில் கூட்டணிக் கட்சியினர் தீவிரமாக உழைத்ததாகவும், ஆனால் கூட்டணிக் கட்சியினர் நின்ற தொகுதிகளில் திமுகவின் உள்ளூர் நிர்வாகிகள் மெத்தனமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது சில தொகுதிகளில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மே 4-க்கு பிறகு என்ன நடக்கும்?

தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் திமுகவிற்குச் சாதகமாக இருந்தாலும், தனிப்பெரும்பான்மை கிடைக்குமா அல்லது கூட்டணிக் கட்சிகளின் தயவு ஆட்சி அமைக்கத் தேவைப்படுமா என்பதைப் பொறுத்தே கூட்டணியின் எதிர்காலம் அமையும். ஒருவேளை திமுக தனிப்பெரும்பான்மை பெற்றால், கூட்டணிக் கட்சிகளின் பிடிமானம் குறையக்கூடும். மாறாக, ஆட்சி அமைக்கக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் (தொங்கு சட்டசபை போன்ற சூழல்), அமைச்சரவையில் இடம் அல்லது கூடுதல் அதிகாரங்களை இடதுசாரிகளும் காங்கிரஸும் கோர வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: வைரலாகும் “தவெக அமைச்சரவை பட்டியல்”.. செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்!!

பாஜகவை நுழைய விடக்கூடாது:

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடக்கூடாது என்ற ஒற்றை இலக்கை நோக்கி இந்தக் கூட்டணி பயணித்தாலும், அதிகாரப் பகிர்வு மற்றும் மரியாதை என்று வரும்போது விரிசல்கள் தவிர்க்க முடியாததாகிறது. மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இந்தக் கூட்டணி அப்படியே தொடருமா அல்லது புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்பது தெரிந்துவிடும்.

Follow Us