AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைரலாகும் “தவெக அமைச்சரவை பட்டியல்”.. செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்!!

நயினார் நாகேந்திரன், "தவெக ஒரு இடத்தில் கூட வெல்லாது" என்று கூறியதற்குப் பதிலளித்த அவர், நயினாருக்கு இதுதான் இறுதித் தேர்தல் என்றும், அவருக்கு கட்சியில் பதவி இருக்குமா என்பதே கேள்விக்குறி என்றும் விமர்சித்தார். இளம் தலைமுறையினரின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாக வைகோ அவர்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், அவரது நேர்மையான கருத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

வைரலாகும் “தவெக அமைச்சரவை பட்டியல்”.. செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்!!
செங்கோட்டையன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 May 2026 10:42 AM IST

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாகக் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில், வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் கட்சிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாக ஒரு சில கருத்துக்கணிப்புகளும், அதிமுக ஆட்சி அமையும் என ஒரு சில கருத்துகணிப்புகளும், தவெகவுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்றும் ஒரு சில கருத்துக்கணிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: “வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”.. முகவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

உத்தேச அமைச்சரவை பட்டியல் குறித்த விளக்கம்:

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ‘உத்தேச அமைச்சரவை பட்டியல்’ ஒன்று வைரலாகி வருகிறது. இது குறித்து தவெகவின் முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிகாரப்பூர்வமற்ற தகவல்களுக்கு பதில் சொல்ல இயலாது” என்று சுருக்கமாகத் தெரிவித்தார். குறிப்பாக, அவருக்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, அது போன்ற செய்திகளைப் புறந்தள்ளினார்.

கருத்துக்கணிப்புகளும் மக்கள் மனநிலையும்:

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுக மற்றும் அதிமுக-விற்குச் சாதகமான முடிவுகள் வெளியாவது குறித்து அவர் கூறியதாவது, மக்கள் கருத்துக்கணிப்புகள் தெளிவாக உள்ளன. அமைதியான முறையில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். புதிய மாற்றத்தை எதிர்நோக்கி, எதிர்காலத் தமிழகத்தை ஆள ஒரு சிறந்த தலைவராக விஜய்யை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். மே 4-ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் இந்தியாவையே வியக்க வைக்கும் வகையில் அமையும்.

நயினார் நாகேந்திரன், “தவெக ஒரு இடத்தில் கூட வெல்லாது” என்று கூறியதற்குப் பதிலளித்த அவர், நயினாருக்கு இதுதான் இறுதித் தேர்தல் என்றும், அவருக்கு கட்சியில் பதவி இருக்குமா என்பதே கேள்விக்குறி என்றும் விமர்சித்தார். இளம் தலைமுறையினரின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாக வைகோ அவர்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், அவரது நேர்மையான கருத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

விஜய்யின் அதிரடி உத்தரவு:

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடனடியாகப் பனையூர் வர வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, “இது எல்லா கட்சிகளிலும் நடக்கக்கூடிய சாதாரண நடைமுறைதான். எங்களைப் பொறுத்தவரை எங்கள் வேட்பாளர்கள் விசுவாசமானவர்கள், அவர்கள் உயிரையே தியாகம் செய்யத் தயாராக உள்ளனர்” என்று உறுதியாகக் கூறினார்.

இதையும் படிக்க: விஜய்க்கு 41% வாக்குகள்.. 121 இடங்கள்.. கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி..

வெற்றி வாய்ப்பு குறித்த நம்பிக்கை:

தங்களுக்கு 150 முதல் 200 இடங்கள் வரை வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை நேரில் காண முடிவதாகவும் அவர் தெரிவித்தார். “கர்வம் மற்றும் சுயநலம் உள்ள சாம்ராஜ்யங்கள் அழியும்” என்று அவர் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜாவின் பதிவு:

இசைஞானி இளையராஜா அவர்கள் விஜய்யின் பாடல் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது குறித்துப் பேசிய அவர், “விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே பிரதிபலிக்கிறது என்பதையே இது காட்டுகிறது” என்றார்.

Follow Us