AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள புதிய இணையதளம்.. மொபைல் செயலியும் அறிமுகம்..

5 மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் https://results.eci.gov.in/ என்ற இணையதளத்தை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மே 4ஆம் தேதி காலை 8 மணி முதல் செயல்படும். இதற்குபின், “ECI NET” மற்றும் Voter Helpline செயலிகள் மூலமாகவும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள புதிய இணையதளம்.. மொபைல் செயலியும் அறிமுகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 May 2026 13:12 PM IST

மே 2, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள, தேர்தல் ஆணையம் தனிப்பட்ட இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மே 4ஆம் தேதி காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகளை மாநில வாரியாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. குறிப்பாக, அசாம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெற்றது.

5 மாநில தேர்தல் முடிவுகள்:

இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாக உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 85 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரியில் 90%, கேரளாவில் 78%, அசாமில் 85% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல் கட்டத்தில் 93% மற்றும் இரண்டாவது கட்டத்தில் 92% வாக்குப்பதிவு பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “தவெக ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை”.. மே 4-ல் உண்மை தெரியும்.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!

சில பிரச்சினைகள் காரணமாக 15 தொகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை அறிய மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

புதிய இணையதளம் அறிமுகம்:

இதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணிக்கை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சுமூகமாக நடைபெற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

5 மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் https://results.eci.gov.in/ என்ற இணையதளத்தை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மே 4ஆம் தேதி காலை 8 மணி முதல் செயல்படும். இதற்குபின், “ECI NET” மற்றும் Voter Helpline செயலிகள் மூலமாகவும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் சுற்று வாரியாக எண்ணப்படும். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையும் சுமூகமாக நடைபெற தேர்தல் ஆணையம் முழு தயாரிப்புடன் செயல்பட்டு வருகிறது.

Follow Us