கருப்பு படம் தாமதமாக வெளியாக இதுதான் காரணம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
RJ Balaji Talks About Karuppu Movie Delayed : தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் இயக்குநராக உள்ளவர் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் உருவான கருப்பு படம் தாமதமாக வெளியாக என்ன காரணம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி தற்போது மக்களுக்கு பிடித்த இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் என்றாலே அதற்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது எழுதி இயக்கி உள்ள படம் கருப்பு. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டே படப்பிடிப்பை தொடங்கிய நிலையில் கடந்த 2025-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் தொடர்ந்து பல காரணனங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது படம் திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான பல தகவல்களை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசி வருகிறார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
கருப்பு படம் தாமதமாக வெளியாக இதுதான் காரணம்:
இந்தப் படத்தை உருவாக்கும் பணியில் சில தாமதங்கள் ஏற்பட்டன. சில நாட்களில் படப்பிடிப்பு நடைபெறவில்லை. சில மாதங்களில் படப்பிடிப்பே இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தை நாங்கள் எங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளப் பயன்படுத்திக்கொண்டோம்; எதிர்பாராத விதமாக, சில நல்ல விஷயங்களும் நிகழ்ந்தன. இப்போது, இப்படம் மிகச் சிறப்பாக உருவாகி வந்துள்ளது. இப்படம் நிச்சயம் ஒரு பெரும் வெற்றியைப் பெறும். இதில் ஏதேனும் நேர்ந்தால், அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன் என்றும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:
Dir #RJBalaji Recent Interview
– There were some delays while making this film. On some days, shooting did not happen, and during some months, there was no shooting at all.
– We used that time to correct our mistakes, and unexpectedly, some good things also happened.
– Now,… pic.twitter.com/m4op2I1wdO
— Movie Tamil (@_MovieTamil) May 6, 2026
Also Read… சேயோன் பட நாயகியை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் எக்ஸ் தள பதிவு



