AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேயோன் பட நாயகியை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் எக்ஸ் தள பதிவு

Actress Bhagyashri Borse Enterd Seyon Movie: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சேயோன். கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் நாயகியாக யார் நடிக்கிறார் என்று பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உறுதி செய்துள்ளது வைரலாகி வருகின்றது.

சேயோன் பட நாயகியை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் எக்ஸ் தள பதிவு
சேயோன் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 May 2026 13:18 PM IST

இந்தி சினிமாவில் கடந்த 2022-ம ஆண்டு வெளியான யாரியான் 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். இவரது நடிப்பில் முதலாவதாக வெளியான படமே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் மிஸ்டர் பச்சன் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான காந்தா என்ற படத்தின் நடிகையாக அறிமுகம் ஆனார். இதில் நடிகை துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து மக்களின் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சேயோன் படத்தில் இவர் நாயகியாக இணைந்துள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேயோன் பட நாயகியை உறுதி செய்த படக்குழு:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நாயகனாக நடித்து வரும் படம் சேயோன். இந்தப் படத்தினை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை யார் என்று பல கேள்விகள் இருந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கருப்பு படத்தை எந்த வயதில் உள்ளவர்கள் எல்லாம் பார்க்கலாம்?  வெளியானது சென்சார் அப்டேட்

சேயோன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மம்முக்கா – லால்லேட்டன்… தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன மோலிவுட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

Follow Us