AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வராகனும்… – திடீரென வைரலாகும் திரிஷாவின் பழைய வீடியோ

TVK Vijay : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை திரிஷா பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் நான் முதல்வராக வேண்டும் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வராகனும்… – திடீரென வைரலாகும் திரிஷாவின் பழைய வீடியோ
விஜய் - திரிஷா
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 May 2026 22:10 PM IST

சென்னை, மே 4 : தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் இந்த சூழலில், நடிகை திரிஷாவின் பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள சூழலில், இந்த வீடியோ மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு வாக்கில், தனது சினிமா பயணத்தின் ஆரம்பகாலத்தில் திரிஷா அளித்த ஒரு பேட்டியில், அவரிடம் எதிர்கால இலக்குகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திரிஷா, ஒரு நாள் நான் தமிழக முதல்வராக வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஷாக்கான தொகுப்பாளரிடம் நான் உண்மையாக சொல்கிறேன் இன்னும் 10 ஆண்டுகளில் அதனை சாதிப்பேன் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வரானால் என்ன செய்வீர்கள் என தொகுப்பாளர் கேட்க, முதலில் என்னை தேர்ந்தெடுங்கள், பிறகு சொல்கிறேன் என சிரிப்புடன் பதிலளித்தார். இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய்யின் தவெக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

வைரலாகும் திரிஷாவின் பழைய வீடியோ


மே 4, 2026 இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரிஷா அதிகாலையில் திருப்பதியில் வழிபட்டார். பின்னர் பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. இரண்டு சம்பவங்களையும் இணைத்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், காரில் விஜய் வீட்டுக்கு வரும் த்ரிஷா, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த தருணம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us