AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Trisha Krishnan: சவுத் குயின் திரிஷாவுக்கு பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட கருப்பு படக்குழு!

Trisha Krishnans 43rd Birthday: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் சவுத் குயின் என்று அழைக்கப்பட்டவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் இன்று (04/05/2026) தனது 43வது பிறந்தநாளை கொண்டடைவருகிறார். அந்த வகையில் கருப்பு படக்குழு சிறப்பு போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Trisha Krishnan: சவுத் குயின் திரிஷாவுக்கு பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட கருப்பு படக்குழு!
திரிஷா கிருஷ்ணன் கருப்பு திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 May 2026 17:53 PM IST

சவுத் இந்திய சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் திரிஷாவின் நடிப்பில் தமிழில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, நடிகர் சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த படமானது இந்த 2026ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்துவரும் நிலையில், இதில் திரிஷா வழக்கறிஞர் ப்ரீத்தி (Preethi) என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த 2026ம் ஆண்டில் திரிஷாவின் நடிப்பில் வெளியாகும் முதல் படமாகவும், கருப்பு அமைந்துள்ளது. அந்த வகையில் இன்று 2026 மே 04ம் தேதியில் நடிகை திரிஷா கிருஷ்ணன் தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். அந்த வகையில், கருப்பு திரைப்படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கம்.. தவெக கட்சி தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்!

திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் பதிவு:

இன்று (04/05/2026) தனது 43வது பிறந்தநாளை நடிகை திரிஷா கிருஷ்ணன் சிறப்பாக கொண்டாடிவருகிறார். அந்த வகையில் இன்று அதிகாலையிலே திருப்பதியில் நடந்த சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டிருந்தனர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு, ரசிகர்களை சந்தித்த திரிஷாவிற்கு, பலரும் பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து சென்னை வந்த திரிஷா, பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு சென்றிருந்தார். இதையடுத்து அவரை சந்தித்த பிறகு மீண்டும் வீடு திருப்பினார்.

இதையும் படிங்க:  சொகுசு கார்கள்.. ரியல் எஸ்டேட் உட்பட.. தவெக தலைவர் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை திரிஷா தமிழில் கருப்பு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இப்படமானது ஒரு கமர்ஷியல் கதைக்களத்தில் தயாராகியுள்ளாள் நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதையடுத்து திரிஷா மீண்டும் சித்தார்த்துடன் ஜோடியாக புதிய படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us