AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயக்குநர்கள் சர்ச்சையில் இருக்கும் தலைவர் 173 படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Rajinikanths Thalaivar 173 Movie Release Update: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது தலைவர் 173 படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர்கள் சர்ச்சையில் இருக்கும் தலைவர் 173 படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 May 2026 15:32 PM IST

உலக அளவில் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக அளவில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்து வந்தார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து ஜெயிலர் 2, தலைவர் 173 மற்றும் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிக்கும் படங்கள் என கமிட்டாகி வந்தார். இதில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதிலும் குறிப்பாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் 2 படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது தலைவர் 173 படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

173 படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ:

அதன்படி இந்தப் படம் தொடர்ந்து இயக்குநர்கள் சர்ச்சையில் இருக்கும் நிலையில் யார் இந்தப் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். தொடர்ந்து சுந்தர் சி முதல் சிபி சக்ரவர்த்தி வரை இயக்குநர் அறிவிக்கப்பட்டு பிறகு அவர்கள் அந்தப் படத்தில் இருந்து விலகியதும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் சிபி சக்ரவர்த்தி தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் தொடர்ந்து வெளியாகவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக யார் இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தலைவர் 173 படம் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… திரையரங்குகளில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கர படம்… கொண்டாடும் படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் படத்திற்கு முன்பு மாரி செல்வராஜ் அந்த ஹிட் படத்தின் பார்ட் 2 இயக்க உள்ளாரா? வைரலாகும் தகவல்

Follow Us