AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AA23 படம் லோகேஷின் ஒரு கனவுத் திட்டம்.. இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த தகவல்!

Lokesh Kanagaraj Dream Project: தமிழில் சிறந்த இயக்குநராகவும், எழுத்தாளராகவும் இருந்தவர்பவர் ரத்ன குமார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் AA23 திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த படம் பற்ற இயக்குநர் லோகேஷின் பார்வை பற்றி விவரமாக பார்க்கலாம்.

AA23 படம் லோகேஷின் ஒரு கனவுத் திட்டம்.. இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த தகவல்!
லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுன் மற்றும் ரத்னகுமார் Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 May 2026 20:57 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரத்னகுமார் (Rathnakumar). இவர் தமிழில் மேயாத மான்(Meyaadha Maan), குலு குலு போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் 29 தி பிலிம் (29 The Film). இந்த படத்தில் நடிகர் விது (Vidhu) மற்றும் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2026 மே 8ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. காதல், எமோஷனல் போன்ற கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை திரையரங்குகளில் பெற்றுவருகிறது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் ரத்னகுமார், அல்லு அர்ஜுனின் (Allu Arjun) AA23 படத்தின் வசனம் மற்றும் எழுத்தாளராக பணியாற்றிவருகிறார்.

இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கவுள்ள நிலையில், இப்படமானது எவ்வாறு இருக்கும், லோகேஷ் கனகராஜின் திட்டம் என்ன என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் அப்படி AA23 படம் குறித்து என்ன பேசியுள்ளார் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: சூர்யாவின் கருப்பு பட FDFS காட்சிகள் எப்போது திரையிடப்படும்? – விவரங்கள் இதோ!

லோகேஷ் கனகராஜின் AA23 திரைப்படம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் பேசியிருந்த இயக்குநர் ரத்னகுமார், “AA23 கதையானது லோகேஷின் தனிப்பட்ட விருப்பமான ஒன்று. நாங்கள் யோசனைகளைப் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், அவர் எப்போதும் இப்படத்தின் கதைகளம் பற்றிப் பேசுவார். நாங்கள் மற்ற திரைப்பட யோசனைகளைப் பற்றிப் பேசும்போது கூட, அவர் இந்தப் படத்தின் காட்சிகளையே குறிப்பிட்டே பேசுவார்.

இதையும் படிங்க: ரொம்ப பெருமையா இருக்கு.. மக்கள் எல்லாரும் உங்கள் பக்கம் நிற்கிறார்கள்.. முதல்வர் விஜய் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் ஸ்ரீமன்!

AA23 என்பது லோகேஷின் ஒரு கனவுத் திட்டம், மேலும் இந்தப் படம் ஒரு பிரம்மாண்டமான வெற்றிக்குத் தகுதியானது என்று அவர் நினைக்கிறார். 29 தி பிலிம் படத்திற்குப் பிறகு, எனது முழு கவனமும் AA23 மீதுதான் இருக்கும். டிசி படத்திற்குப் பிறகு, லோகேஷின் முழு கவனமும் AA23 மீதுதான் இருக்கும் என அதில் அவர் கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுனின் AA23 திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த எக்ஸ் பதிவு:

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த AA23 படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் நிலையில், யார் நாயகியாக நடிக்கிறார் என்பது உறுதியாகவில்லை. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஜூன் இறுதியில் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us