பவிஷின் ‘லவ் ஒ லவ்’ படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது? வெளியான அறிவிப்பு இதோ!
Love Oh Love Movie Teaser Update: தமிழில் தனுஷின் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பவிஷ் நாராயண். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் 2வது திரைப்படம்தான் லவ் ஓ லவ். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இதன் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் வாத்தி, மாறன் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிவந்தவர் பவிஷ் நாராயண் (Pavish Narayan). இவர் தனுஷின் (Dhanush) மருமகனும் கூட. இவர் தனுஷின் இயக்கத்தில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான நிகழ்வுக்கு என்மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனிகா சுரேந்தர் நடித்திருந்த நிலையில், இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் 2வது ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமான திரைப்படம்தான் “லவ் ஓ லவ்” (Love Oh Love). இப்படத்தை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் (Mahesh Rajendran) என்பவர் இயக்க, தயாரிப்பாளர் தினேஷ் ராஜா ஏன்பவர் தயாரித்துவருகிறார். இப்படத்தில் பவிஷ் நாராயனுக்கு ஜோடியாக தெலுங்கு யூடியூபர் நாக துர்கா (Naga Durga) என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.
இவர் கதாநாயகியாக நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரலில் முழுவதுமாக நிறைவடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: கரண்ட் போகுதா..? சோலார் வாங்கி மாட்டிக்கோங்க! – மாஸ்டர் மகேந்திரன் பேச்சு!
லவ் ஓ லவ் படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்:
இந்த லவ் ஓ லவ் படமானது அதிரடி காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இப்படத்தில் பவிஷ் நாராயண் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ள நிலையில், நீக் படத்திற்கு பிறகு இவருக்கு இப்படம் பெரும் வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் 2026ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: மகாநதி சீரியலில் லாஸ்ட் டே ஷூட்டிங்.. எமோஷனலாக கண்ணீர்விட்ட நடிகர்கள் – வீடியோ இதோ!
லவ் ஓ லவ் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:
A story of love, laughter, conflict, dreams, and unforgettable youthful moments awaits. ✨❤️#LoveOhLove Teaser from Tomorrow.
In Theatres Soon. ❤️#LOL @zinemaindia @creativeentoffl @dhananjayang @thinkmusicindia @Pavishvofficial @nagadurgaoffl @alyekmaliya @MuthaiahG pic.twitter.com/ccPbaAsJrv
— Zinema Media (@zinemaindia) June 14, 2026
பவிஷ் நாராயண் நடித்துவரும் புது படம் :
லவ் ஓ லவ் படத்திற்கு பிறகு 3வதாக பவிஷ் நாராயண் நடித்துவரும் படம்தான் அட்டாக்கர். இப்படத்தில் இவர் வாலிபால் விளையாட்டு நாயகனாக நடித்துவரும் நிலையில், இதை இயக்குநர் தாமோ நாகபோஷணம் என்பவர் இயக்கிவருகிறார். இதில் குஷ்புவின் மகள் அவந்திகா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.