Dhanush: தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. D55 பட முக்கிய அப்டேட் வெளியாகும் தேதி அறிவிப்பு!
D55 Movie update: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், தனுஷ் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் D55. இப்படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இது பற்றிய அறிவிப்பு இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய மக்கள் மத்தியில் பேமஸ் நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கர (Kara). இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு தனுஷ் இணைந்து நடித்துவரும் புதிய திரைப்படம்தான் D55. இப்படத்தை அமரன் திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கிவருகிறார். இருவர் அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷின் இப்படத்தில் இணைந்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்பாக தொடங்கியுள்ளது. இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) இணைந்து நடித்துவருகின்றனர்.
மேலும் மிக முக்கியமான வேடத்தில் மலையாள ஸ்டார் மம்முட்டி (Mammooty) மிக முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், முக்கிய அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் முக்கிய அப்டேட் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 18ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: டாடா பட இயக்குநரின் எழுத்தில் உருவான டார்க் படம் – ட்ரெய்லர் இதோ
தனுஷின் D55 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டின் அறிவிப்பு குறித்த பதிவு:
Target set 🎯
It’s time for the much awaited update on #D55 – Loading on 18th June🔥@dhanushkraja @mammukka @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905 @theSreyas @APIfilms @homescreenent @sandy_sashr @vishurams… pic.twitter.com/kLyk5NWIok
— Wunderbar Films (@wunderbarfilms) June 15, 2026
தனுஷின் D55 படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இப்படத்தில் சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாக நடிக்க, நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மலையாள நடிகர் மம்முட்டி வில்லன் வேடத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. வரும் 2026ம் ஆண்டு ஜூன் 18ம் தேதியில், இப்படத்தின் டைட்டில் அல்லது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பில் என்ன அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடப்படவில்லை.
இதையும் படிங்க: லவ்ல பிரச்சன இல்ல.. லவ்வே பிரச்சனதான்.. பவிஷ் நாராயணின் லவ் ஓ லவ் பட டீசர் வெளியானது!
தனுஷின் D55 படத்தின் ரிலீஸ் எப்போது:
இப்படமானது தனுஷ் நடித்ததில் அதிக பட்ஜெட் படமாக உருவாகிவருகிறதாம். இப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வரும் நிலையில், இப்படத்தில் சிறப்பாக பாடல்கள் உருவாகிவருகிறதாம். இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து தனுஷுடன் நடனமாடவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.