Love Oh Love: லவ்ல பிரச்சன இல்ல.. லவ்வே பிரச்சனதான்.. பவிஷ் நாராயணின் லவ் ஓ லவ் பட டீசர் வெளியானது!
Love Oh Love Movie Teaser: தனுஷின் இயக்கத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் பவிஷ் நாராயண். இவர் 2வது நடித்திருக்கும் புதிய திரைப்படம்தான் லவ் ஓ லவ். இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இதன் டீசரை படம் இன்று (15/06/2026) வெளியாகியுள்ளது. தற்போது வெளியான இந்த டீசர் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் பவிஷ் நாராயண் (Pavish Narayan). இவர் வேறுயாருமில்லை தனுஷின் சகோதரியின் மகன், அவரின் மருமகன் ஆவார். இவர் 2வது ஹீரோவாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் லவ் ஓ லவ் (Love Oh Love). இப்படத்தில் பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு யூடியூபர் நாக துர்கா (Naga Durga) என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாகவே இவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் (Magesh Rajendran) இயக்க, தயாரிப்பாளர்கள் தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் (Foxn) என்பவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் வெங்கட் பிரபு தங்களின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வித்தியாசமான காதல் கதையில் உருவாகியுள்ள இப்பட டீசர் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: முதல்வர் விஜயை நேரில் சந்தித்தபோது அவர் சொன்னது என்ன? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
பவிஷ் நாராயணின் லவ் ஓ லவ் பட டீசரை பகிர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்:
Glad to unveil the #LoveOhLove Teaser. ❤️
My best wishes to the team. Hope this fresh romantic entertainer wins hearts everywhere. ✨
🔗https://t.co/66XO8CoKhx#LOL @zinemaindia @creativeentoffl @dhananjayang @thinkmusicindia @Pavishvofficial @nagadurgaoffl @alyekmaliya… pic.twitter.com/jAcS6YoeF1
— karthik subbaraj (@karthiksubbaraj) June 15, 2026
லவ் ஓ லவ் படத்தின் டீசர் எப்படி இருக்கு:
இப்படத்தில் பவிஷ் நாராயண் உண்மையான காதலை தேடும் ஆணாகவும், நடிகை நாக துர்கா ஆடம்பரம் மற்றும் பணத்தை அதிகம் செலவழிக்கும் பெண்ணாகவும் நடித்துள்ளார். இப்படமானது கிட்டத்தட்ட டாக்ஸிக் காதல் கதையில் தயாராகியுள்ளது. இதன் டீசரில் சில காட்சிகள் ஏற்கனவே வேறு படத்தில் பார்த்ததுபோலவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமான டாக்ஸிக் கதையிலே இப்படமும் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனி – ஸ்வாசிகா வைத்து ஒரு படம்.. வாய்ப்பு கொடுங்க – மிஷ்கின் பேச்சு!
லவ் ஓ லவ் பட நடிகர்கள் :
இப்படத்தில் பவிஷ் மற்றும் நாக துர்கா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவர்களுடன் நடிகர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, அஸ்வத், சௌந்தர்யா, கதிர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.