Rajinikanth: ‘அவருக்குள் பல திட்டங்கள் இருந்தது.. ஒரு பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்’ – லதா ரஜினிகாந்த் பேச்சு!
Latha Rajinikanth: ஒட்டுமொத்த திரையுலகிலும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக புகழப்பட்டுவருபவர் ரஜினிகாந்த். இவரின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், ஒரு பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம் என பேசியுள்ளார். அவர் அப்படி என்ன கூறியுள்ளார் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகனாக நடித்து அசத்திவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்து போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முழுமையாக தமிழில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவரின் மனைவி லதா ரஜினிகாந்த் (Latha Rajinikanth) பிரபல பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் ரஜினிகாந்தின் படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் தற்போது மக்கள் நிலை இயக்கத்தை போல புது அமைப்பு ஒன்றை உருவாக்கி அதை நடத்திவருகிறார். இந்த அமைப்பு அரசியல் அமைப்பு போல இல்லாமல், மக்களின் தேவையை நிறைவேற்றும் ஒரு போராட்ட அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக ரஜினிகாந்த் அரசியலில் ஈடுப்பாகிறார் என பலரும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த் தான் அரசியல் வர விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் ஒன்றில் பேசியிருந்த ரஜினியின், மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினியை போல ஒரு பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம் என பேசியிருக்கிறார்.




இதையும் படிங்க: கரண்ட் போகுதா..? சோலார் வாங்கி மாட்டிக்கோங்க! – மாஸ்டர் மகேந்திரன் பேச்சு!
ரஜினிகாந்த் குறித்து நேர்காணலில் லதா ரஜினிகாந்த் பேசிய விஷயம்:
அந்த நேர்காணலில் லதா ரஜினிகாந்த் பேசுகையில், “ஒரு பெரிய தலைவர், 2021ம் ஆண்டில் அவர் வராதது மிகப்பெரிய மிஸ். அப்போது அவர் வரவில்லையே என்பதற்காக, நான் கொஞ்சம் பேட்-ஆக ஃபீல் செய்தேன். அவர் வந்திருந்தாள் (அரசியலுக்கு) இன்னும் நன்றாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. ஏனென்றால் அவருக்குள் பல திட்டங்கள் மற்றும் கனவுகள் இருந்தன.
இதையும் படிங்க: திருமணத்தின் விழாவில் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா.. அவரே வெளியிட்ட விஷயம் இதை பாருங்க!
ஆனால் எதிர்பாராத கோவிட் காரணமாக அவர் அப்படி முடிவெடுக்கவேண்டியது ஆகிவிட்டது. எப்படி ஒரு நாடு இருக்கவேண்டும் என்பதை அவர் திட்டமிட்டிருந்தார். அவரின் பார்வையை நான் அறிவேன், ஒரு பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்” என்று அந்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார். தர்ப்பது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகிவருகிறது.
லதா ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு:
Edhe….Huge Miss ahhhh….🤯#latharajinikanth #Rajinikanth pic.twitter.com/8u79szidRu
— Rahman (@Rahmanabdul001) June 13, 2026
தற்போது லதா ரஜினிகாந்த் தனி அமைப்பை ஏற்படுத்தி நடத்திவரும் நிலையில், இது மக்களுக்கான அமைப்பாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நற்பணிமன்றம், ரஜினியின் புகைப்படத்தையோ அல்லது பெயரையோ எந்த ஒரு அமைப்போ அல்லது அரசியல் கட்சியோ படன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியலில் ஒரு பேசும்பொருளாகவே இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.