Rajinikanth : ரஜினிக்கு ஜெயிலர் 2 கடைசி படமா? லதா ரஜினிகாந்த் சொன்ன முக்கிய விஷயம்!
Latha Rajinikanth Explains About Rajinis Retirement : கோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக கலக்கி வருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ஓய்வெடுக்கவுள்ளார் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில், சமீபத்தில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.

இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த்தைத் (Rajinikanth) தெரியாத நபரே இருக்க முடியாது என்று கூறலாம்.ரஜினிக்குத் தென்னிந்தியா மட்டுமல்லாமல் வட இந்தியாவில் அதிகம் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் இவரின் திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் வெளியாகி வருகிறது. நடிகர் ரஜினியின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வேட்டையன் (Vettaiyan) . இந்த படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். மாறுபட்ட ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் வெளியான இந்தப் படமானது நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கூலி (Coolie) திரைப்படத்தில் இணைந்தார். இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது நடிகர் ரஜினிகாந்த்திற்கு திடீரென உடல் நிலையில் சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து 3 வாரங்களுக்குப் பின் மீண்டும் கூலி படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை என்று கூறப்படும் நிலையில், சமீப காலமாக ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தகு தொடர்ந்து சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளார் (Retirement from cinema) என்று தகவல்கள் பரவி வந்தது.
லதா ரஜினிகாந்த்தின் வைரல் பேட்டி :
இந்நிலையில் அந்த போலியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த லதா ரஜினிகாந்த்திடம், ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளாரா ? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லதா ரஜினிகாந்த் “எனக்குத் தெரிந்தால் சொல்லலாம், ஆனால் அதைப்பற்றி யோசிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார்” என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவலானது இணையத்தில் பரவிவந்த போலியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கூலி படக்குழு வெளியிட்ட பதிவு :
Sound-ah yethu! 📢 Deva Varraaru🔥 #Coolie worldwide from August 14th 😎 @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off @Dir_Chandhru… pic.twitter.com/KU0rH8kBH7
— Sun Pictures (@sunpictures) April 4, 2025
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசிற்கு மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகிவரும் படம் கூலி. இந்த படத்தை விஜய்யின் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடங்கி, கடந்த 2025 மார்ச் தொடக்கத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மாறுபட்ட அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் கூடிய இந்த படமானது வரும் 2025, அக்டோபர் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.