Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bison : நடிகர் துருவ் விக்ரமின் ‘பைசன்’.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

Bison Movie Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரின் மகன்தான் நடிகர் துருவ் விக்ரம். இவர் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகினார். தனது முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் உருவாகிவரும் படம் பைசன். மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது .

Bison : நடிகர் துருவ் விக்ரமின் ‘பைசன்’.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
பைசன் படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 03 May 2025 19:11 PM

கோலிவுட் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). நடிகர் விக்ரமின் (Chiyaan Vikram) மகனான இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஆதித்யா வர்மா  (Adithya Varma) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கு விஜய் தேவரகொண்டாவின்  அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து மகான் (Mahaan) படத்தில் தனது அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து இவரின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் பைசன் (Bison). இந்த படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கியுள்ளார்.

இவரின் இயக்கத்தில் இறுதியாக வாழை படம் வெளியாகி சூப்பர் ஹிட்டை கொடுத்த நிலையில் , அதைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமை முன்னணி நாயகனாக வைத்து, இந்த பைசன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 பிப்ரவரி மாதத்துடன் சிறப்பாக முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இந்த பைசன் படமானது தீபாவளியை முன்னிட்டு வரும் 2025, அக்டோபர் 17ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பைசன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

நடிகர் துருவ் விக்ரமின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான டிராகன் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இந்த படத்தில் நடிகர்கள் கலையரசன், லால், பசுபதி, ஹரி கிருஷ்ணன், ரஜிஸா விஜயன், அழகம் பெருமாள் மற்றும் பல்வேறு நடிகர்கள் உடன் நடித்துள்ளனர். மாறுபட்ட கதைக்களத்துடன் கூடிய இந்தப் படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வாழை திரைப்படம் இறுதியாக வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் படங்களை உருவாக்கி வருகிறார். அதைப்போலத்தான் இந்த பைசன் படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

வெடிக்கும் போர்? ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்!
வெடிக்கும் போர்? ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்!...
மதுரை சித்திரைத் திருவிழா: ஆட்டுத்தோலால் பை செய்யும் பணி தீவிரம்!
மதுரை சித்திரைத் திருவிழா: ஆட்டுத்தோலால் பை செய்யும் பணி தீவிரம்!...
இன்று நடக்கு நீட் இளநிலை தேர்வு... 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
இன்று நடக்கு நீட் இளநிலை தேர்வு... 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு...
தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை இருக்குமா?
தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை இருக்குமா?...
வெயிலுக்கு ரெஸ்ட்.... வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?
வெயிலுக்கு ரெஸ்ட்.... வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?...
உடல் எடையைக் குறைத்தது எப்படி? நடிகை சாராவின் சீக்ரெட்
உடல் எடையைக் குறைத்தது எப்படி? நடிகை சாராவின் சீக்ரெட்...
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!...
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!...
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!...
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!...
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?...