Suriya : ‘காக்க காக்க’ படத்தில் சூர்யா நடிக்க யார் காரணம் தெரியுமா?
Kakha Kakha Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் பல ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இதற்கு முன் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியான காக்க காக்க படத்தை சூர்யா நடிப்பதற்கு யார் காரணம் என்பதைப் பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது

கோலிவுட் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன்தான் சூர்யா (Suriya). இவர் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் (Nerrukku Ner) என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் (Vijay) இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து காதலே நிம்மதி, சந்திப்போமா மற்றும் பூவெல்லாம் கேட்டுப்பார் எனத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார். சினிமாவில் நுழைந்த 3 வருடத்தில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் (Poovellam Kettuppar) என்றார் படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர தொடங்கியது.
மேலும் நடிகர் சூர்யா பல்வேறு சூப்பர் ஹிட் படங்களைப் பல இயக்குநர்களுடன் இணைந்து கொடுத்துள்ளார். அவ்வாறு சூர்யாவிற்குப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர்கள் இருவரின் கூட்டணியில் பல வெற்றிப் படங்கள் வெளியாகியிருக்கிறது.
அதில் சூப்பர் ஹிட்டான படம்தான் “காக்க காக்க”. கடந்த 2003ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க, ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது சூர்யா மற்றும் கவுதம் வாசுதேவ் மேனனின் கூட்டணியில் வெற்றியான படத்தில் இதுவும் ஒன்று. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா நடிக்கக் காரணம் யார் தெரியுமா? அதுவேறு யாருமில்லை நடிகை ஜோதிகாதான். இதை அவரே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
நடிகை ஜோதிகா சொன்ன விஷயம் :
முன்னதாக பேசிய வீடியோவில், தொகுப்பாளர் கேட்டிருப்பார் காக்க காக்க படத்தில் சூர்யா நடிப்பதற்கு நீங்கதான் காரணமா என்று கேட்டிருந்தார்? அதற்கு ஜோதிகாவும் ஆமா ஐ லவ் சூர்யா என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா :
சினிமாவில் பேமஸ் ஜோடிகளின் ஒருவர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களின் மூலம் காதல் தொடங்கியது. இவர்கள் இருவரும் இணைந்தது நடித்த முதல் படம் பூவெல்லாம் கேட்டுப்பார். கடந்த 1999ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் வசந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம்தான் சூர்யா மற்றும் ஜோதிகா காதலிக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து உயிரில் கலந்தது, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க, மாயாவி மற்றும் பல்வேறு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படங்களைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.
நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவை தொடர்ந்து பாலிவுட் மற்றும் மலையாளம் சினிமாவில் தீவிரம் செலுத்தி வருகின்றார். மேலும் பாலிவுட்டில் வெப் சீரிஸ் கவனம் செலுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து சூர்யாவும் தெலுங்கில் படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தை லக்கி பாஸ்கர் திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். மனைவி ஜோதிகாவை தொடர்ந்து சூர்யாவும் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.