Pahalgam Attack: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல் முறை! ஜம்மு காஷ்மீர் முதல்வரை சந்தித்த பிரதமர் மோடி.. பதட்டத்தில் பாகிஸ்தான்!
PM Modi-Abdullah Meeting Post Pahalgam Attack: பஹல்காம் தாக்குதலுக்குப் பின், பிரதமர் மோடியும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் சந்தித்துப் பேசினர். சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் விளைவுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உமர் அப்துல்லா, மாநிலத்தின் முழுமையான ஒத்துழைப்பை உறுதியளித்தார். தாக்குதலுக்குப் பழிவாங்குவது பற்றியும் விவாதம் நடைபெற்றது. இந்த சந்திப்பு இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லி, ஏப்ரல் 30: பஹல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Attack) பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியும் (PM Modi), ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா (Jammu & Kashmir Chief Minister Omar Abdullah) இன்று அதாவது 2025 மே 3ம் தேதி சந்திந்து பேசினார். இந்த சந்திப்பானது பிரதமர் மோடியில் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்ததாகவும் தாக்குதலுக்கு பிறகு எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து விவாதித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், இந்த தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவை சந்தித்த பிறகு, அடுத்ததாக பிரதமர் மோடி கடற்படைத் தளபதியுடன் ரகசிய சந்திப்பை நடத்தினார். இது பாகிஸ்தானின் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
உமர் அப்துல்லா பிரதமர் மோடியிடம் பேசியது என்ன..?
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது ஆபத்தானது. இதன் தாக்கம் பின் நாளில் மிகப்பெரிய பாதிப்பை கொடுக்கும் என்று பிரதமர் மோடியிடத்தில் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த துயரமான நேரத்தில் மத்திய அரசாங்கத்திடமிருந்து முழு மாநில அந்தஸ்தை கோரும் அளவுக்கு தனது அரசியல் அவ்வளவு தாழ்ந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்:
JKNC posts on ‘X’: ” Chief Minister J&K Omar Abdullah called on the Prime Minister Narendra Modi in New Delhi and discussed various issues, including last week’s Pahalgam Terror Attack.” pic.twitter.com/j085qsHQ9Q
— ANI (@ANI) May 3, 2025
மத்திய அரசின் எந்தவொரு முடிவுக்கும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் முழுமையாக ஒத்துழைக்கும் என்று முதலமைச்சர் உமர் அப்துல்லா பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும், இந்தச் சந்திப்பில், பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்குவது குறித்தும், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருவதால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தாக்குதலில் நடந்தது என்ன..?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகருக்கு அருகிலுள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலா தலத்தில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், உயிரிழந்த பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்த பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். இறந்த 26 பேரில் 2 வெளிநாட்டினர் மற்றும் 2 உள்ளூர்வாசிகள் அடங்குவர் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.