Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pooja Hegde : ரெட்ரோ சூர்யாவின் ஸ்டைலில் பூஜா ஹெக்டே செய்த விஷயம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Pooja Hegde Did Action In Suriyas Style : தென்னிந்திய சினிமாவின் மீது கவனம் செலுத்தி வருபவர் பூஜா ஹெக்டே. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் படம் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் சூர்யாவின் ஸ்டைலில் இவர் கம்பு சுற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

Pooja Hegde : ரெட்ரோ சூர்யாவின் ஸ்டைலில் பூஜா ஹெக்டே செய்த விஷயம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நடிகை பூஜா ஹெக்டே Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 03 May 2025 20:15 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே (Pooja Hegde) . தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாகக் கலக்கி வந்த இவர் தற்போது, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் (Karthik Subbaraj)  இயக்கத்தில் வெளியான இந்த படமானது திரையரங்குகளில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் நடிகை பூஜா ஹெக்டே சூர்யாவிற்கு (Suriya)  ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்துள்ளார். ஆக்ஷ்ன், காதல் மற்றும் நகைச்சுவை என மாறுபட்ட கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சண்டைக் காட்சிகள், ஒவ்வொன்று ரசிகர்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அதில் ஒரு காட்சியில் நடிகர் சூர்யா இரண்டு கம்புகளை வைத்து, வில்லனைத் தாக்கும் காட்சியானது பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த காட்சியை சூர்யாவின் ஸ்டைலில் நடிகை பூஜா ஹெக்டே ரீகிரியேட் செய்ய முயன்ற வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அவர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

நடிகை பூஜா ஹெக்டே தற்போது இந்தியில் உருவாகிவரும் ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹாய் என்ற திரைப்படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ரெட்ரோ திரைப்படத்தின் ரிலீஸை தொடர்ந்து இந்த படக்குழுவுடன் திரையரங்கில் படம் பார்த்துள்ளார். இது குறித்த வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த படத்தில் நடிகர் சூர்யாவின் பாணியில் கம்புகளை வைத்து சண்டை செய்யும் காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யாவின் இந்த படமானது திரையரங்குகளை பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இந்த படமானது சுமார் ரூ. 60 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே தமிழில், விஜய்யின் ஜன நாயகன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படமானது வெறும் 2025 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே, நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது . ஆனால் இந்த படத்தில் இவர் நடிக்கிறார் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? - வழிபாடு முறைகள் இதோ!
துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? - வழிபாடு முறைகள் இதோ!...
ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் பலி
ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் பலி...
அமைச்சர்கள் சென்னையில் இருக்கக்கூடாது முதலமைச்சர் ஸ்டாலின் கறார்
அமைச்சர்கள் சென்னையில் இருக்கக்கூடாது முதலமைச்சர் ஸ்டாலின் கறார்...
ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்... கார் ஏற்றி ஒருவர் கொலை
ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்... கார் ஏற்றி ஒருவர் கொலை...
மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்.. சிக்கியது எப்படி?
மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்.. சிக்கியது எப்படி?...
தமிழ் சினிமாவின் பேரழகி.. நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவின் பேரழகி.. நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!...
கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா!
கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா!...
மீன்பிடித் தடைகாலம்: மீன் வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
மீன்பிடித் தடைகாலம்: மீன் வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு...
வெடிக்கும் போர்? ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்!
வெடிக்கும் போர்? ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்!...
மதுரை சித்திரைத் திருவிழா: ஆட்டுத்தோல் பை செய்யும் பணி தீவிரம்!
மதுரை சித்திரைத் திருவிழா: ஆட்டுத்தோல் பை செய்யும் பணி தீவிரம்!...
இன்று நடக்கு நீட் இளநிலை தேர்வு... 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
இன்று நடக்கு நீட் இளநிலை தேர்வு... 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு...