வெடிக்கும் போர்? ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்… எல்லையில் பதற்றம்!
Pahalgam Terror Attack : போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. தரையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கம் திறனை கொண்டுள்ளது. அண்மையில், இந்தியா போர் விமானங்களை சோதனையிட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான், மே 04 : பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 450 கி.மீ தூரம் வரை செல்லும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து உள்ளது. அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, பயிற்சியின் ஒரு பகுதியை ஏவப்பட்டதாக இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
வெடிக்கும் போர்?
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இதில் பாகிஸ்தானுக்கு பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வருகிறது. இதனால், பயங்கரவாதிகளுக்கு, அவர்களுக்கு துணையாக இருப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இதனல், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், பல்வேறு நடவடிக்கையில் எடுத்து வருகிறது. மேலும், இருநாடுகளும் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கின்றன.
அண்மையில், இந்தியா விமானப்படை போர் விமானங்களை இறக்கி சோதனை நடத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் கங்கா விரைவுச் சாலையில் இந்திய விமானப்படை சோதனை முயற்சியில் ஈடுபட்டது. ரஃபேல், சுகோய்-30 எம்கேஐ, மிக்-29, மிராஜ்-2000, ஜாகுவார் உள்ளிட்ட முன்னணி விமானங்களை இறக்கி சோதனை நடத்தியது.
ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்
#Pakistan today conducted a successful training launch of the Abdali Weapon System—a surface-to-surface missile with a range of 450 kilometers—as part of the military exercise Ex INDUS. pic.twitter.com/Kqt3gZeLa2
— Global Defense Insight (@Defense_Talks) May 3, 2025
இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தி இருக்கிறது. அதாவது, 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணையை சோதனை நடத்தியதாக இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனால், இருநாடுகளுக்கு இடையே மேலும் பதற்றம் அதிகரித்தள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் இருக்கிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் உணவுகளை சேமித்து வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.