இறக்குமதிக்கு தடை போட்ட இந்தியா.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. பாகிஸ்தானுக்கு நெருக்கடி
India bans Imports From Pakistan : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடரந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் இந்தியா தடை விதிதுதள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என வர்த்தக அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

டெல்லி, மே 03 : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடரந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி (Imports Ban From Pakistan) செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் இந்தியா தடை விதிதுதள்ளது. மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்து வர்த்தக அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டள்ளது. இதன் மூலம், வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு பொருளாதார சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரே வர்த்தகப் பாதையான வாகா-அட்டாரி எல்லை ஏற்கனவே மூடப்பட்டிருந்தது.
இறக்குமதிக்கு தடை போட்ட இந்தியா
இதனால், ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதாரம் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இறக்குமதி வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியது பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த தடையின்படி, பாகிஸ்தானில் இருந்து வரும் எந்தவொரு பொருட்களின் அனைத்து இறக்குமதிகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்படுகிறது.
அது நேரடி இறக்குமதியாக இருந்தாலும் அல்லது மூன்றாம் நாடு வழியாக மறைமுகமாக இறக்குமதியாக இருந்தாலும் முழுமையாக தடை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்க்க அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது மறு உத்தரவு வரும் வரை உடனடியாக தடை செய்யப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் நலனுக்காக இந்தக் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு விதிவிலக்கு அளிக்க இந்திய அரசின் முன் ஒப்புதல் தேவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு நெருக்கடி
India bans imports or transit of all goods originating in or exported from Pakistan pic.twitter.com/BNt7abHgiP
— IANS (@ians_india) May 3, 2025
இந்த உத்தரவு பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியை கொடுக்கும். ஏற்கனவே, அனைத்து வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்தியிருக்கிறது. இதனால், பாகிஸ்தானில் பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெரும்பாலான மருந்துகள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் நிலையில், தற்போது வர்த்தகம் நிறுத்தப்பட்டதால், அங்கு மருந்து தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
அதோடு, பல்வேறு உணவு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இது பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இதனால், பாகிஸ்தான் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இதனால், மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.