Aadhaar : ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
Update Aadhaar Address Online | இந்திய குடிமக்களுக்கு ஆதார் மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் இல்லை என்றால் பல பணிகளை செய்து முடிக்க முடியாத சூழல் தான் தற்போது நிலவுகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைனில் சுலபமாக மாற்றுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து குடிமக்களும் ஆதார் கார்டு கட்டாயம் (Aadhaar Card) வைத்திருக்க வேண்டும். இந்திய குடிமக்கள் அடையாள ஆவணமாக ஆதார் கார்டு படுகிறது. எந்த நிலையில் ஆதார் இல்லை என்றால் பல சேவைகளை செய்து முடிக்க முடியாத சூழல் உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI – Unique Identification Authority of India) வழங்கப்படும் 12 இலக்க எண் ஆதார் எண் என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் மாறுபடும். ஆதாரில், 12 இலக்க எண்ணிருப்பது மட்டுமின்றி அதில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களும் அடங்கி இருக்கும்.
ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது கட்டாயம்
அதாவது புகைப்படம், பெயர், முகவரி, கைரேகை, கண் ரேகை உள்ளிட்ட சில முக்கிய தகவல்களும் இடம்பெற்றிருக்கும். ஆதாரில் பெயர் முகவரி வயது உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை ஆதாரில் உள்ள விவரங்கள் பிழையாக இருக்கும் பட்சத்தில் சில வேலைகளை செய்வதில் அது சிக்கலை ஏற்படுத்தும். இந்த நிலையில், ஆதார் கார்டில் பிழையாக உள்ள முகவரியை எப்படி திருத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
மனிதர்களுக்கு முகவரி என்பது நிலையானதாக இருக்காது. காரணம் கல்வி, வேலை, திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக அவர்கள் இடம் மாறிக்கொண்டே இருப்பர். இதனால் ஆதார் கார்டில் ஒரே முகவரியை பின்பற்றுவது சற்று சவாலாக இருக்கும். இந்த நிலையில் தான், பொது மக்களுக்கு ஆதார் கார்டில் உள்ள முகவரியை திருத்தம் செய்து கொள்ள இந்திய தனித்து அடையாள ஆணையம் அனுமதி வழங்குகிறது. அதன்படி ஆன்லைன் மூலமாகவே மிக சுலபமாக ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் ஆதார் முகவரியை மாற்றம் செய்வது எப்படி?
- அதற்கு முதலில் https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் My Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள Update Demographic Data Online என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து லாக் செய்ய வேண்டும்.
- இதற்கு அடுத்து தோன்றும் பக்கத்தில் உள்ள Update Aadhaar Online என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து Proceed to Aadhaar Update என்பதை கிளிச் செய்து அப்டேட் செய்துக்கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக ஆதார் முகவரியை மாற்றம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.