Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Agni Nakshatram: தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை பாதுகாப்பு வழிமுறை

Agni Nakshatram 2025: 2025 மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர காலத்தில், தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம், அதிகம் தண்ணீர் அருந்தவும், காபி, டீ, மதுபானங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளையும், செல்லப்பிராணிகளையும் வெயிலில் வாகனங்களில் விட்டுச் செல்லக் கூடாது. கடலோரப் பகுதிகளில் வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Agni Nakshatram: தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை பாதுகாப்பு வழிமுறை
தொடங்கியது அக்னி நட்சத்திரம்.Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 04 May 2025 06:38 AM

தமிழ்நாடு மே 4: தமிழகத்தில் (Tamilnadu) இன்று 2025 மே 4 அக்னி நட்சத்திரம் (Agni Nakshatram)
தொடங்கி மே 28 வரை நீடிக்கிறது. கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் சுகாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு வழிகாட்டி அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம், குடை அல்லது தொப்பி பயன்படுத்த வேண்டும். அதிகம் தண்ணீர் குடிக்கவும், காபி, டீ, மதுபானங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெய்யிலில் வாகனங்களில் குழந்தைகள், செல்லப்பிராணிகளை விட்டு செல்லக் கூடாது. கடலோர மாவட்டங்களில் வெப்பஅலை தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்

தமிழகத்தில் கடுமையான வெப்பநிலையில் மழை இல்லாத உச்சக்கட்ட கோடை பருவமான அக்னி நட்சத்திரம் இன்று (மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இது மே 28 வரை 25 நாட்கள் நீடிக்கவுள்ளது. பொதுவாக இந்த நாட்கள் மிகுந்த வெப்பநிலையுடன் கூடிய நாட்களாகும்.

இவ்வாண்டு மார்ச் மாதத்திலேயே வெப்பம் தீவிரமடைந்து வந்த நிலையில், சில பகுதிகளில் வெப்பநிலை 100°F (38°C)க்கு மேல் சென்றுள்ளது. மே மாத தொடக்கத்திலேயே கடுமையான வெயில் தாக்கம் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

வெப்ப அலை மோசமாக தாக்கும் வாய்ப்பு அதிகம்

மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை மோசமாக தாக்கும் வாய்ப்பு அதிகம். பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தமிழக அரசு பொதுச் சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது:

  • மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்; உடலை ஈரமாக வைத்திருக்க வேண்டும்.
  • மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நேரடி வெயிலில் செல்ல வேண்டாம். வீட்டிற்குள் தங்கிக்கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.
  • வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலையில், தொப்பி, குடை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும்.
  • வெய்யிலில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை விட்டு செல்லவே கூடாது. வெப்பநிலை அபாயகரமாக உயரக்கூடும்.
  • நீர்ச்சத்து குறையக்கூடிய காபி, டீ, மதுபானங்களை தவிர்க்கவும் அல்லது குறைக்கவும்.

அக்னி நட்சத்திர காலத்தில் இந்த வழிகாட்டி ஆலோசனைகளை கடைபிடிப்பது, பொதுமக்கள் சுகாதாரத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அக்னி நட்சத்திரம்

தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில், ஆண்டுதோறும் மே மாதம் 4 முதல் 28 வரை வெயிலின் தீவிரம் அதிகரிக்கும் காலக்கட்டம் ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ எனப்படுகிறது. இந்த காலத்தில் சூரிய வெப்பம் உச்சநிலையை அடைவதால், கடும் வெப்பத்துடன் கூடிய அந்நாட்கள் சுகாதார ரீதியாகவும் கவனத்துடன் இருக்க வேண்டியவையாகும். 2025ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கி, 25 நாட்கள் நீடிக்கிறது.