ஆதார் கார்டு இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக உள்ளது. இன்றைய நாளில், ஆதார் கார்டு இல்லையென்றால், பல வேலைகளை செய்ய முடியாத சூழல் தான் உள்ளது. ஆதார் கார்டு பல இடங்களில் முக்கிய ஆவணமாக கேட்கப்படும் நிலையில், பொதுமக்கள் அதனை நகல் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆதார் நகல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட உள்ளதாகவும், ஆதார் தொடர்பாக மிக கடுமையான விதிகள் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் கார்டு நகல் பயன்படுத்தப்படுவதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதனை தடுக்க ஆதார் கார்டு நகலை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.