ஊட்டியில் உறைபனி.. சுற்றுலா பயணிகளுக்கு கொண்டாட்டம்.. புலம்பும் பொதுமக்கள்!
Ooty Frost Season Starts | நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பொதுவாக நவம்பர் மாதத்திலே உறைபனி காலம் தொடங்கிவிடும். ஆனால், 2025-ல், 40 நாட்கள் தாமதமாக உறைப்பனி தொடங்கியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஊட்டி, டிசம்பர் 15 : தமிழகத்தின் (Tamil Nadu) மிகவும் குளிர்ச்சியான மாநிலங்களில் ஒன்றுதான் ஊட்டி (Ooty). இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் கடும் குளிருடன் இருக்கும் ஊட்டி, நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி போற்றி காணப்படும். தற்போது நவம்பர் முடிந்து டிசம்பர் மாதம் நடந்துக்கொண்டு இருக்கும் நிலையில், ஊட்டில் உறைப்பனி காலம் தொடங்கியுள்ளது.
ஊட்டியில் தாமதமாக தொடங்கிய உறைபனி
ஊட்டியில் பொதுவாக நவம்பர் மாதமே உறைபனி காலம் தொடங்கிவிடும். ஆனால், காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. அதாவது சுமார் 40 நாட்கள் கழித்து டிசம்பர் 12, 2025 முதல் ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா பகுதிகளான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட் ஆகிய பகுதிகள் அதிகாலை நேரங்களில் உறைப்பனி மூடி காட்சியளிக்கின்றன.
இதையும் படிங்க : தவெக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் போராட்டம்.. பதவி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு!




சுற்றுலா பயணிகளுக்கு கொண்டாட்டமாக மாறியுள்ள உறைபனி
உறைபனி பார்க்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் ஆசையாக இருக்கும். ஆனால். வெளிநாடுகளுக்கு சென்றால் அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டும் என்பதால் அது பலருக்கும் ஆசையாக மட்டுமே இருக்கும். அத்தகையவர்களுக்கு ஊட்டியின் இந்த உறைபனி காலம் தான் சிறந்த தேர்வாக இருக்கும். ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம்.. செங்கோட்டையன் பேச்சு!
கடும் சிரமங்களை சந்திக்கும் பொதுமக்கள்
ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கியுள்ள நிலையில், மரம், செடி கொடிகள் மற்றும் புதர்கள் என அனைத்து வெண்பனி மூடி வெண்மையாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களின் போது உறைபனி சாலைகளை மூடி காணப்படும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.