தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம்.. செங்கோட்டையன் பேச்சு!
Sengottaiyan About TVK Leader Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனை கூட்டம் இன்று (டிசம்பர் 14, 2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய செங்கோட்டையன் தான் சரியான இடத்தில் தான் சேர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.
நாமக்கல், டிசம்பர் 14 : நாமக்கல் (Namakkal) மாவட்டம், திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK – Tamilaga Vettri Kazhagam) திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனை கூட்டம் இன்று (டிசம்பர் 14, 2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், அக்கட்சியில் புதியதாக இணைந்துள்ள நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், தான் சேர வேண்டிய இடத்தில் தான் சேர்ந்திருக்கேன் என்று கூறியுள்ளார்.
தவெக சட்டமன்ற தொகுதி கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன்
இந்த கூட்டத்தில் பெங்கேற்று பேசிய செங்கோட்டையன், அதிமுக (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam), திமுகவில் (DMK – Dravida Munnetra Kazhagam) இருந்தும் நமது கட்சிக்கு வந்து இணைய இருக்கிறார்கள். தேர்தல் களம் என்பது எப்படி இருக்கும் என யாராலும் யூகிக்க முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவெகவிற்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. மக்கள் சக்தி இருக்கிறது. போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்




சேர வேண்டிய இடத்தில் தான் சேர்ந்திருக்கிறேன் – செங்கோட்டையன்
தொடர்ந்து பேசிய அவர், சேர வேண்டிய இடத்தில் தான் சேர்ந்திருக்கிறேன். மக்கள் சக்தியால் விஜய் முதலமைச்சர் ஆவார். தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு விஜய்யை விட்டால் யாருமில்லை. இளைஞர்களை தட்டி எழுப்பும் ஆற்றல் விஜய்க்கு மட்டுமே உள்ளது. பெண்கள் பாதுகாப்பில் இன்றைக்கு விஜய்யை விட்டால் வேறு யாரும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. பாமகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்
தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம் – செங்கோட்டையன்
மேலும், 2026 மே மாதம் தமிழ்நாட்டின் நிரந்த முதலமைச்சர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம். தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஏற்றுக்கொள்ளும் நபர்களால் மட்டுமே கூட்டணியில் இணைய முடியும். இதுவே நமது லட்சிய பயணம். வெற்றி வாகை சூட தயாராக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.