Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் போராட்டம்.. பதவி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு!

TVK Administrators Protest | 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த நிலையில், சென்னை பனையூசில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் போராட்டம்.. பதவி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு!
போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Dec 2025 17:33 PM IST

சென்னை, டிசம்பர் 14 : தமிழகத்தில் (Tamil Nadu) 2026, மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என பல கட்சிகள் களம் காண உள்ளன. பல்முணை போட்டியாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளை கட்சிகள் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், புதியதாக வந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் காண உள்ளது. இதன் காரணமாக தவெக தலைவர் விஜய் தேர்தலை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

தீவிர தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்ட பணிகள், ஆலோசனை கூட்டம், கூட்டணி என பல முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது, பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, பொதுமக்களை சந்தித்து பேசுவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தவெக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், தவெக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : “வேட்பாளர்களை விஜய் தான் அறிவிப்பார்”.. நிர்வாகிகளுக்கு அதிரடியாக பறந்த உத்தரவு

கட்சி தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்திய தவெக நிர்வாகிகள்

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் இன்று (டிசம்பர் 14, 2025) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆதவ் அர்ஜுனாவில் புகைப்படத்தை பேனரில் பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

பதவி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கட்சியில் பதவி தருவதாக கூறி பலரிடம் இருந்து பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாகவும் நிர்வாகிகள் குற்றம் சாட்டி கோஷம் எழுப்பியுள்ளனர். சொந்த கட்சியினரே தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.