“வேட்பாளர்களை விஜய் தான் அறிவிப்பார்”.. நிர்வாகிகளுக்கு அதிரடியாக பறந்த உத்தரவு!!
TN assembly election: ஒவ்வொரு தொகுதியிலும் ஆலோசனை நடத்தி பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தியுள்ளதால், அதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில், முதல் கட்டமாக நேற்று முன்தினம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று திருச்செங்கோடு தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுப்பவர்களை தனித் தனியாக நேர்காணல் செய்த பிறகே விஜய் அறிவிப்பார் என கட்சித் தரப்பில் கூறுகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை என்றும், தற்போது நடைபெற்று வருவது தொகுதி வாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே எனவும் அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் விளக்கமளிப்பட்டுள்ளது. முன்னதாக, குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு மட்டும் தொகுதி நிர்வாகிகள் மத்தியில் வேட்பாளர்களை இன்று முதல் அறிமுகம் செய்ய தவெக திட்டமிட்டுள்ளதாகவும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், அம்மாவட்டத்தில் உள்ள சில தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
மேலும் படிக்க: அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..
மறுப்பு தெரிவத்த தவெக:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதும், கூட்டணியை இறுதி செய்வதுமாக பரபரப்பாக இயங்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தவெக இன்று பொதுமக்களுக்கு அல்லாமல் கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் வேட்பாளர் விவரத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், அக்கட்சி தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி கட்சித் தலைவரால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் கட்சித் தலைவர் தான் களமிறக்குவார் என்றும், அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிக்கு பொறுப்பாளர்கள் நியமனம்:
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளதன் படி, அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் ஆலோசனை நடத்தி பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தியுள்ளதால், அதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில், முதல் கட்டமாக நேற்று முன்தினம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று திருச்செங்கோடு தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் அனைத்து தொகுதியிலும் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்?.. அதிமுக உரிமை மீட்பு குழுவை, கழகமாக மாற்றியதால் பரபரப்பு!!
திருச்செங்கோடு தவெக வேட்பாளர் அருண்ராஜ்:
குறிப்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி வாரியாக இருக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இதனிடையே, திருச்செங்கோடு தவெக வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.