அமெரிக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு, ஒரு பெரிய அதிர்ச்சி தரும் அப்டேட் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், புதிய அமெரிக்க டூரிஸ்ட் விசா விதிகளை அறிவித்துள்ளது. இதில் டிஎன்ஏ முதல் சமூக வலைதளம் வரை, பல புதிய கட்டாயச் சோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஃபெடரல் ரிஜிஸ்டரில் வெளியிடப்பட்ட 11 பக்க அறிவிப்பின்படி, விசாவுக்கான விண்ணப்பத்தில், இனி மிகவும் கடுமையான தகவல்கள் கேட்கப்படவிருக்கின்றன.