Cinema Rewind : சிவாஜி பண்ணவில்லை என்றால் அது சாதாரண படமாகியிருக்கும்.. நடிகர் கமல்ஹாசன் சொன்ன சம்பவம்!
Kamal Haasan Talks About Sivaji Ganesans Acting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவர் தனது சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்து வருகிறார். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவிலேயே பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் தேவர் மகன் படத்தில் சிவாஜி நடித்ததை பற்றிப் பேசியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) என்றாலே அவர் மிக சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1970ம் ஆண்டுகளிலிருந்தே படங்களில் ஹீரோவாகவும், முக்கிய தோற்றத்திலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து இவர் இதுவரைக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் இந்தியன் 2 (Indian 2). இந்த படத்தை இயக்குநர் எஸ்.ஷங்கர் (S. Shankar) இயக்கியிருந்தார். கடந்த 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் 1 படத்தின் தொடர்ச்சி கதைக்களத்துடன் இந்த படமானது வெளியாகியிருந்தது. பாகம் 1 ஒப்பிடும்போது பாகம் 2 படமானது பெரும் தோல்வியைச் சந்தித்தது என்றே கூறலாம். இந்த படத்தின் கதைக்களம் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்விடையடைந்தது. இதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த படத்தின் கதையை மணிரத்னத்துடன் இணைந்து, கமல் ஹாசனும் எழுதியுள்ளார். இந்த படத்தில் கமலுக்கு அடுத்த ரோலில் சிலம்பரசன் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, ஜூன் 05ம் தேதியில் வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் முன்னதாக நடிகர் கமல் ஹாசன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் தேவா் மகன் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) நடித்தது குறித்தும், அவருடன் பணியாற்றியது குறித்தும் பேசியிருக்கிறார். அதைக் குறித்தது பார்க்கலாம்.
நடிகர் சிவாஜி கணேசனைக் குறித்து கமல்ஹாசன் பேசியது
அந்த வீடியோவில் நடிகர் கமல் ஹாசன் “எனது எழுத்தில் உருவான தேவர் மகன் படத்தில் ஆரம்பத்தில் அனைவரும் ஏன் சிவாஜி கணேசனைப் படத்தில் நடிக்க வைத்தீர்கள் என சிலர் என்னிடம் கேட்டனர். அன்றைய காலத்தில் உள்ள நடிகர்கள் யாராவது அதில் நடிக்க வைத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்று பலர் என்னிடம் கூறினார்கள். ஆனால் சிவாஜி சார் இல்லை என்றால் தேவர் மகன் படம் சாதாரணமான படமாகிவிடும் என்று கூறினேன். இந்த படத்தில் கதையை கூறி நான் சிவாஜி கணேசனிடம் கெஞ்சினேன், அவரின் காலில் அமர்ந்து கதையை கூறி அவரை இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள வைத்தேன்.
ஒரு குழந்தை பெற்றோரைப் பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்வதுபோல நானும் தேவர் மகன் படத்தில் நடிக்கவைக்கச் சிவாஜி கணேசனைக் கூட்டிவந்தேன். நான் எழுத்தாளராக இந்த படத்தில் பெரும் பங்கைப் பெற்றிருந்தாலும், இந்த படம் வெற்றிபெற முழு காரணமாக இருந்தது சிவாஜி சார்தான் என்று நடிகர் கமல் ஹாசன் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.