சிங்கப்பூர் தேர்தல்.. 14வது முறையாக ஆட்சியை பிடித்த ஆளுங்கட்சி.. பிரதமரான லாரன்ஸ் வோங்!
Singapore General Election 2025 : சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம், 14வது முறையாக மீண்டும் மக்கள் செயல் கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனால், பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூர், மே 03 : சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் (Singapore General Election) பிரதமர் லாரன்ஸ் வோங்கின் மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், 14வது முறையாக மீண்டும் மக்கள் செயல் கட்சி (People Action Party) ஆட்சியை பிடித்துள்ளது. எனவே, லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் 2025 மே 3ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 97 நாடாளுமன்ற தொகுதிகளில் ஆளும் மக்கள் செயல் கட்சி 87 இடங்களில் போட்டியிட்டது. இதில் ஏற்கனவே ஆளும் மக்கள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியின்று கைப்பற்றி இருந்தது. இதனால், மீதமுள்ள இடங்களுக்கு மே 3ஆம் தேதியான நேற்று தேர்தல் நடந்தது.
சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல்
காலை முதலே மக்கள் வாக்களித்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 27.6 லட்சம் மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருக்கும் நிலையில், 82 சதவீத வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.
வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆளும் மக்கள் செயல் கட்சி 87 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம், 2024ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற லாரன்ஸ் வோங்க் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கத்துள்ளார். மேலும், மக்கள் செயல் கட்சி 14வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. மேலும், தொழிலாளர்கள் கட்சி 10 இடங்களில் வென்றுள்ளது.
சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சி பலவீனமாக இருப்பதாலும், செல்வாக்கு குறைவாக இருப்பதாலும் 26 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. எனவே, அதில் 10 இடங்களில் தொழிலாளர் கட்சி வென்றுள்ளது. எனவே, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நாட்டில் ஆட்சி செய்து வந்த மக்கள் செயல் கட்சி.
14வது முறையாக ஆட்சியை பிடித்த ஆளுங்கட்சி
2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, தற்பேது அமோக வெற்றியை மக்கள் செயல் கட்சி பதிவு செய்துள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்க்கு வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “பொதுத் தேர்தலில் உங்கள் மகத்தான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் லாரன்ஸ் வாங்க்.
இந்தியாவும் சிங்கப்பூரும் வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த வெற்றி மக்களிடையேயான உறவுகளால் ஆதரிக்கப்படுகிறது. எங்கள் விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் முன்னேற்றுவதற்காக உங்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.