Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வசீரிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதல்.. பொறுப்பேற்ற தெஹ்ரீக் இ தலிபான்

Pakistan Terror Attack: ஜூன் 28, 2025 அன்று பாகிஸ்தானின் வடக்கு பகுதியான வசீரிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலுக்கு இந்திய பொறுப்பு என பாகிஸ்தான் பழி சுமத்தி உள்ளது. ஆனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை பகிரங்கமாக கண்டித்து நிராகரித்துள்ளது.

வசீரிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதல்.. பொறுப்பேற்ற தெஹ்ரீக் இ தலிபான்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 29 Jun 2025 20:01 PM

பாகிஸ்தான், ஜூன் 29, 2025: பாகிஸ்தானில் வடக்கு பகுதியான வசீரிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. சமீப காலத்தில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் இது ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மிர் அலி பகுதியில் நடந்துள்ளது. இந்த பகுதியில் சமீப காலமாக தீவிரவாத வன்முறை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது அருகில் இருக்கக்கூடிய வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்து புரிந்தது ஆறு குழந்தைகள் மேலும் பல பெண்கள் காயம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தெஹ்ரீக் இ தலிபான்:

தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் இ தலிபான் பிரிவான ஹபீஸ் குல் பகதூர் குழு இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு இருந்த போதிலும் காதி கிராமத்தின் வழியாக சென்ற ராணுவ வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தாக்குதல் படையினர் ஓட்டிச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் கிட்டத்தட்ட 800 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும். இது அருகில் இருக்கக்கூடிய பொதுமக்களின் வீடுகளையும் சேதப்படுத்தி உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா மீது பழி சுமத்திய பாகிஸ்தான்:

தாக்குதல் நடந்த பின், பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என குற்றம் சாட்டியது. பாகிஸ்தானை நிலைகுலைக்க இந்தியா எடுக்கும் முயற்யாகும் என குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான அறிக்கையில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்தது.

குற்றச்சாட்டை மறுத்த இந்தியா:


ஆனால் இஸ்லாமபாத்தின் இந்த குற்றச்சாட்டை இந்தியா வெளியுறவு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்து தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ ஜூன் 28 2025 அன்று வஜிரிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கும் இந்தியாவை குற்றம் சாட்ட பாகிஸ்தான் ராணுவம் முயற்சிப்பதை நாங்கள் கண்டோம். இந்த அறிக்கையை கடும் கண்டனங்களுடன் நிராகரிக்கொறோம்” என தெரிவித்துள்ளார். ஆதாரங்கள் இல்லாத நிலையில் அபத்தமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு, பதிலாக பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தார் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து உயிரிழந்த 13 வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். அதேபோல் பாகிஸ்தான் பிரதமரும், இந்த தற்கொலை படையின் தாக்குதலை கோழைத்தனமான செயல் என குறிப்பிட்டிருந்தார். ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் காபுலை கைப்பற்றியதிலிருந்து வடமேற்கு பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வருவது குறிப்பிடத்தக்கது.