Suriya : ‘கண்ணப்பா’ பட நடிகர் விஷ்ணு மஞ்சுவுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்த சூர்யா!
Suriya Congratulates Vishnu Manchu : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருபவர் சூர்யா. இவர் தற்போது சூர்யா46 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கண்ணப்பா பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சுவுக்கு படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து பூங்கொத்தை அனுப்பியுள்ளார். இதற்கு விஷ்ணு மஞ்சு எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2025, ஜூன் 27ம் தேதி, பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் கண்ணப்பா (Kannappa). இந்தப் படத்தைத் தெலுங்கு இயக்குநர் முகேஷ் குமார் சிங் (Mukesh Kumar Singh) இயக்கியிருந்தார். இந்த திரைப்படமானது பெரும் சிவபக்தனான கண்ணப்பனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தில் கண்ணப்பனின் வேடத்தில் முன்னணி நடிகராக விஷ்ணு மஞ்சு (Vishnu Manchu) நடித்திருந்தார். இவர் இப்படத்தில் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த கண்ணப்பா படமானது இந்துக்களின் புராணக் கதைகளில் ஒன்றான கண்ணப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த கண்ணப்பா படமானது கடந்த 2025, ஜூன் 27ம் தேதி வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படக்குழுவிற்கும், நடிகர் விஷ்ணு மஞ்சுவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் நடிகர் சூர்யா (Suriya) பூங்கொத்து (Bouquet) அனுப்பியுள்ளார். இது தொடர்பாகப் பதிவு ஒன்றை நடிகர் விஷ்ணு மஞ்சு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




நடிகர் விஷ்ணு மஞ்சு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Big brother @Suriya_offl ! Thank you so much for the flowers and more so the message.
I continue to look at your work for inspiration and today getting such a message from you is one of the biggest highlight. Love you my big brother. pic.twitter.com/C59GiUyGCM
— Vishnu Manchu (@iVishnuManchu) June 30, 2025
இந்த பூங்கொத்துடன் நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில், “இந்த மைல்கல்லை அடைந்த னது அன்புள்ள சகோதரர் விஷ்ணுவுக்கு வாழ்த்துகள். உங்களின் ஆர்வம், கடின உழைப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை உண்மையாகவே நிறைவேறியிருக்கிறது. நீங்கள் ரசிகர்களின் மனங்களை வென்ற படத்தை உருவாக்கியதற்காக, நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இன்னும் அதிக வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்” என நடிகர் சூர்யா அந்த பூங்கொத்தில் எழுதி அனுப்பியுள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், நடிகர் விஷ்ணு மஞ்சுவின் தனது எக்ஸ் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.
கண்ணப்பா பட வரவேற்பு :
இந்த கண்ணப்பா திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு முன்னணி வேடத்தில் நடித்திருந்த நிலையில், அதை தொடர்ந்து இப்படத்தில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், அக்ஷய்குமார், காஜல் அகர்வால், மோகன்லால், சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இப்படமானது வெளியாகி 4 நாட்களைக் கடந்த நிலையில், இதுவரை சுமார் ரூ. 25.9 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் மக்களின் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.