Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: வழிகாட்டும் சுபகிரங்கள்.. இந்த 6 ராசிக்கு 2025 முழுக்க லக் தான்!

2025ம் ஆண்டு மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய 6 ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமையும் என ஜோதிட கணிப்புகள் தெரிவித்துள்ளது. இந்த ராசிகளின் அதிபதி கிரகங்களான செவ்வாய், சனி, குரு ஆகியோரின் அருள் ராசிக்காரர்களுக்கு வருமானம், தொழில் வளர்ச்சி மற்றும் உயர் பதவிகள் போன்றவற்றைப் பெற்றுத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: வழிகாட்டும் சுபகிரங்கள்.. இந்த 6 ராசிக்கு 2025 முழுக்க லக் தான்!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 04 May 2025 12:06 PM

ஜோதிடம் (Astrology) வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது என சொல்லப்படுகிறது. அப்படியான ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளது. இதில் சில ராசிகளுக்கு என தனியே பல சிறப்பு பண்புகள் உள்ளன. அதாவது இந்த ராசிக்காரர்கள் ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்ட கிரகங்களால் அதிகப் பலன்களைப் பெறுகிறார்கள்.அத்தகைய கிரகங்கள் ராசியினருக்கு வழிகாட்டியாக செயல்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதம், விடாமுயற்சி, உறுதி மற்றும் திட்டமிடும் குணங்களை கொண்டவர்கள். இவர்கள் அதே குணங்களைக் கொண்ட சனியால் பெரிதும் பயனடைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியாக 2025 ஆம் ஆண்டு (2025 Horoscope Predictions) மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள் கிரகங்களின் வழிகாட்டுதால் மிகப்பெரிய நிலையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

  1. மேஷம்: இந்த ராசிக்காரர்கள் சாகசம், தைரியம், துணிச்சல் மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்களாக திகழ்வார்கள். இவர்களுக்கு செவ்வாய் கிரகம் இந்த ஆண்டு முழுவதும் பெரிதும் உதவியாக இருக்கும். காரணம் மேஷத்தின் அதிபதி செவ்வாய் என்பதால், இந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த முயற்சியையும் வாய்ப்பையும் ஒருபோதும் இழக்க விரும்ப மாட்டார்கள். பொதுவாகவே வருமானத்தை அதிகரிப்பதற்கும், வேலை கிடைப்பதற்கும், ஒருவரின் தொழில் மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் செவ்வாய் மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் மீது மிகுந்த ஆசை இருக்கும். ஆனால் அதைவிட குடும்பத்தினர் மீதான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கும். ராசிக்காரர்கள் இந்த ஆண்டு திட்டமிட்ட முறையில் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கலாம். முதலீடுகளை  ஈர்க்கவும், தங்கள் தொழில் மற்றும் வணிகங்களில் புதிய பாதையை அமைக்கவும் சரியான நேரமாகும். இதே குணங்களைக் கொண்ட சனி பகவான்,பெரிதும் உதவுவார். ரிஷபத்துக்கு 2025 முழுவதும் சனி சாதகமாக இருப்பதால் நிதி வளர்ச்சி சாத்தியமாகும்.
  3. சிம்மம்: இயற்கையாகவே சிம்ம ராசிக்காரர்கள் தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல் மிகவும் தைரியமாக சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசியினர் உயர் பதவிகளை அடைய வலுவான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இவர்களுக்கு குருவின் ஆசீர்வாதம் இருப்பதால் நிச்சயம் நினைத்ததை அடைவார்கள்.
  4. கன்னி: கன்னி ராசியினர் திட்டமிட்ட முயற்சிகளுக்காக எந்த கஷ்டத்தையும் தாங்கும் திறன் கொண்டவர்களாக இருப்பவர்கள். இதே குணங்கள் சனி பகவானுக்கும் உண்டு.  இந்த ராசியில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் மற்றும் வணிகங்களை வளர்ப்பதிலும், முடிந்தால் அவற்றை விரிவுபடுத்துவதிலும், வருமானத்தை அதிகரிப்பதிலும் அதிகமாக கவனம் செலுத்துபவர்கள். இவர்களுக்கு சனி பகவானால் 2025 ஆண்டு நம்பிக்கைகள், இலக்குகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றும் காலமாக மாறும்.
  5. விருச்சிகம்: பொறுமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்ற விருச்சிகத்தினர், 2025 ஆண்டு இதே குணங்களைக் கொண்ட சூரிய பகவானால் உச்சத்திற்கு செல்லும் நிலை உண்டாகும். அவரின் பார்வையால் பணிகளில் உயர் பதவிகளை அடையும் வாய்ப்பு நிறைவேறும். ஒரு அமைப்பின் தலைவராக வேண்டும் என்ற ஆசை நிறைவேறும் வாய்ப்பும் உள்ளது. சொத்து ஆதாயம், சொந்த வீடு, சொந்த வாகனம் போன்றவைகளும் அமையும்.
  6. மகரம்: தீவிர விடாமுயற்சி, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை கொண்ட இந்த ராசிக்காரர்கள்  வீடு, சொத்து, வேலையில் அங்கீகாரம், தொழில் மற்றும் வணிகங்களில் லாபம் போன்றவற்றைப் பெறுவார்கள். இதே குணங்களைக் கொண்ட சனி பகவான் அவர்களுக்கு உதவுவதால் இந்த ராசிக்காரர்கள் ச உயர்ந்த நிலையை அடைவார்கள். அவர்கள் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் காலம் கனியும்.

(ஜோதிட நம்பிக்கையின்படி மட்டுமே இந்த செய்திக்கான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை)