AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தீவிர உடற்பயிற்சியில் நடிகர் சூர்யா – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Suriyas Workout Video Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தொடர்ந்து தனது படங்களுக்காக உடல் எடையை ஏற்றி இறக்குவது வழக்கமா வைத்துள்ளார். தொடர்ந்து உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடை கொண்ட இவர் சமீபத்தில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தீவிர உடற்பயிற்சியில் நடிகர் சூர்யா – இணையத்தில் வைரலாகும் வீடியோ
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jun 2026 18:53 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடியே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்களை விட இந்த கருப்பு படம் அதிக வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூலைப் பெற்றப் படமாக கருப்பு படம் உள்ளது. மேலும் சூர்யாவின் நடிப்பிலும் அதிக வசூல் செய்த படமாக கருப்பு உள்ளது குறிப்பிடத்தகக்து.

தொடர்ந்து கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெலீயாக உள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது அவரது 47-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

தீவிர உடற்பயிற்சியில் நடிகர் சூர்யா:

அதன்படி இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வரும் சூர்யா 47 படம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் உடல் எடையில் வித்யாசம் காட்டும் நடிகர் சூர்யா தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த வீடியோவில் அவர் எவ்வளவு தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்கிறார் என்பது தெளிவாக உள்ளது.

Also Read… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் என்ன படங்கள் ஓடிடியில் ரிலீஸாகுது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யாவின் வீடியோ:

Also Read… Ajith Kumar: ஏசியன் லெ மான்ஸ் கார் ரேஸ்.. 13வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!

Follow Us