AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

RJ Balaji: நான் படத்திற்காக உழைக்கவில்லையா? திருப்பூர் சுப்புரமணியமுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி!

RJ Balaji responds to Tiruppur Subramaniams criticism: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியை சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், விமர்சித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், தற்போது ஆர்.ஜே.பாலாஜி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

RJ Balaji: நான் படத்திற்காக உழைக்கவில்லையா? திருப்பூர் சுப்புரமணியமுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி!
திருப்பூர் சுப்பிரமணியமின் விமர்சனத்திற்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Jun 2026 15:43 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் ஆர்.ஜே-வாக பிரபலமாகி, பின் சினிமாவில் நடிகராகி, தற்போது சுமார் ரூ 300 கோடி வசூல் கொடுத்த படத்தின் இயக்குநராக பிரபலமானவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவரின் இயக்கத்தில் கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு (Karuppu). இப்படத்தில் சூர்யா உச்ச நாயகனாக இருந்த நிலையில், அவருடன் நடிகர்கள் திரிஷா (Trisha), ஸ்வாசிகா (Swasika), ஷிவதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே எதிர்பாராத வரவேற்பை கொடுத்து கிட்டத்தட்ட ரூ 340 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதிலும் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ 170 கோடிகளுக்கு மேல் வசூலித்து ஹிட்டடித்துள்ளது. இப்படமானது 2026 மே 14ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பிறகு தயாரிப்பாளரின் பண பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் ஒரு நாள் தள்ளிப்போனது.

இதில் ஆர்.ஜே.பாலாஜி காரில் அழுதபடியே வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சமீபத்தில் இந்த வீடியோ குறித்து திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விமர்சனம் செய்துள்ளார். அதற்கு ஆர்.ஜே.பாலாஜி தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகராவதற்கு முன்பு.. ரயில் பயணத்தின் நினைவுகளை பகிர்ந்த நடிகர் சோனு சூட்!

தன்மீது எழுந்த விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி:

சமீபத்தில் செய்தியாளர்களிடையே பேசியிருந்த ஆர்.ஜே.பாலாஜி, அதில் “நான் இப்பட கதையை மூன்று வருடமாக எழுதிமுடித்தேன். நான் என் குடும்பத்தினருடன், என் தயாரிப்பாளர் குடும்பத்தினருடன் இந்த கோவிலுக்கு வந்திருக்கிறோம். என் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால், எனது தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக வந்திருக்கமாட்டார். தயாரிப்பாளர் அந்த நபரை அழைத்து, “ஏன் சார், இப்டி பேசுறீங்க-னு? கேட்டாரு. இயக்குநராக, எழுத்தாளராகர் மற்றும் நடிகராக படத்தை மிகுந்த மனப்பூர்வமாக மார்க்கெட் செய்தேன். தயாரிப்பாளர் ஹேப்பி, சூர்யா சார் ஹேப்பி, மொத்த டீமும் ஹேப்பி,.

திருப்பர் சுப்பிரமணியமும் பிடிக்குதா?, ஈரோடு மகேஷுக்கு பிடிக்குதா.. இல்ல மதுரை முதுக்கு பிடிக்குதா? என்பது நமக்கு தேவையில்லை. அவரு பெரிய மனுஷன்.. அவரோட கருத்தை சொல்லிருக்காரு.. என்னோட தயாரிப்பாளர் ஹேப்பியா இருக்காரு. நல்ல சம்பாதித்திருக்காரு. நான் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கேன். அவ்வளவுதான் என்னால செய்ய முடியும்.. அதுதான் சரியான விஷயம்.. அதிலிருந்து எங்களுக்கு லாபம் கிடைத்தது.. அதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என அதில் அவர் கூறியுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:

இதையும் படிங்க: அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பாடிய தனுஷ் – அப்டேட் கொடுத்த படக்குழு

Follow Us