டிக்கெட் முன்பதிவை தொடங்கியது விஜய் ஆண்டனியின் நூறு சாமி படக்குழு
Ticket booking has commenced for Nooru Saami movie | நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் நூறு சாமி. இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தற்போது தொடக்கி உள்ளதை அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சினிமாவில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய விஜய் ஆண்டனி இசையில் தொடர்ந்து அடுத்தடுத்துப் பலப் படங்களில் இருந்து பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதே போல இவர் படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் நூறு சாமி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து உள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சுவாசிகா, அஜய் திக்ஷன், லிஜோமோல் ஜோஸ், முனிஷ்காந்த், பாலாஜி சக்திவே, ஜென்சன் திவாகர் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். இயக்குநர் சசி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.




டிக்கெட் முன்பதிவை தொடங்கியது நூறு சாமி படக்குழு:
அதன்படி படம் வருகின்ற 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தொடங்கி உள்ளது. மேலும் முன்னதாக படத்தைப் பார்த்த திரையுலகினர் அதிக அளவில் பாராட்டி வருவதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது.
Also Read… தனுஷ் குரலில் அதர்வாவின் இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது வாமா வாமா பாடல்!
நூறு சாமி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The wait is almost over. Just 2 days to go to see @vijayantony as Elumalai!❤️#NoorusamiFromJune19#Noorusami Booking Open now!
Booking 🔗 https://t.co/UwHvTWNb0Z
A #FamilyBiopic.#Sasi @vijayantonyfilm #Swasika @AJDhishan990 @karunaasethu @jose_lijomol #BalajiSakthivel pic.twitter.com/yCFbGO6d0V
— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) June 17, 2026
Also Read… Nooru Saami: ஸ்வாசிகா முதல் அஜய் திஷன் வரை.. நூறு சாமி பட கேரக்டர் அறிமுக போஸ்டர்கள் இதோ!