15 ஆண்டுகளைக் கடந்த அவன் இவன் படம்… வீடியோ வெளியிட்ட விஷால்
15 Years Of Avan Ivan Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற அவன் இவன் திரைப்படம் தற்போது 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டு கொண்டாடி உள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து அழுத்தமான கதைகளை இயக்குவதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இயக்குநராக இருக்கிறார் இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பான்மையான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவெற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 17-ம் தேதி ஜூன் மாதம் 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அவன் இவன். இந்தப் படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் கதையின் நாயகன்களாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜி.எம்.குமார், ஆர்.கே., ஜனனி, மது ஷாலினி, அம்பிகா, எஸ்.எஸ்.ராமன், பிரபா ரமேஷ், அனந்த் வைத்தியநாதன், கே. ராமராஜ், ஆர்.எஸ். சிவாஜி, செவ்வாலை ராசு, சூர்யா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அவன் இவன் படம் குறித்து விஷால் வெளியிட்ட பதிவு:
15 வருட சேலஞ்ச். என்னவொரு அனுபவம்! 230 நாட்கள் படப்பிடிப்பு; ஒருபோதும் மறக்க முடியாத, அதே சமயம் என் வாழ்நாளில் இனி ஒருபோதும் முயற்சிக்காத ஒரு கதாபாத்திரம் அது. குறிப்பாக அந்த ‘கண் கோணல்’ (squint) பாவனை… அப்பாடா! நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜாமி, சாயிஷா மற்றும் அவர்களது குடும்பத்தினரை மதிய உணவிற்காகச் சந்தித்தேன். நல்லவேளையாக, அவர்கள் என் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகிலேயே இருந்தார்கள் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… மின் வெட்டு குறித்த சர்ச்சை பேச்சிற்கு மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்
நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
15 years challenge. What an experience it was. 230 days of filming and a character that I can never forget and never will try in my life. Especially the squint. Gossshhh.
Met jammy n sayeesha n fmly for lunch afta ages. Luckily close to my shooting spot.
Cinematography by… pic.twitter.com/hq5GG0nVFI
— Vishal (@VishalKOfficial) June 17, 2026
Also Read… கருப்பு பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து படக்குழு வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு