AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமண பந்தத்தில் இணையப்போகும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. சிம்பிளாக முடிந்த நிச்சயம் – வைரலாகும் போட்டோஸ் இதோ!

Vinusha Devis Engagement: தமிழில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியனுக்கு மாற்றாக நடித்தவர்தான் நடிகை வினுஷா தேவி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவரும் கூட. இவர் தனது நீண்டநாள் காதலரை நிச்சயம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

திருமண பந்தத்தில் இணையப்போகும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. சிம்பிளாக முடிந்த நிச்சயம் – வைரலாகும் போட்டோஸ் இதோ!
வினுஷா தேவி நிச்சயதார்த்தம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Jun 2026 17:27 PM IST

விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவந்த சீரியல்தான் பாரதி கண்ணம்மா (Bharathi Kannamma). இந்த சீரியலானது கிட்டத்தட்ட 1036 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகியிருந்தது. இந்த சீரியல் 2019ம் ஆண்டில் ஒளிபரமாக தொடங்கிய நிலையில், இதன் சீசன் 2 சீரியல் 2023ம் ஆண்டில் நிறைவடைந்தது. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற வேடத்தில் ஆரம்பத்தில் நடித்துவந்தவர் நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியன் (Roshini Haripriyan). இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க, இவரின் இடத்தை நிரப்பும் வகையில் இந்த சீரியலில் நடித்தவர் நடிகை வினுஷா தேவி (Vinusha Devi). இவர் பிரபலமான மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரோஷ்ணி ஹரிப்ரியன் வேடத்தில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க தொடங்கியிருந்தார். இதன் மூலம் இவருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

பின் பிக் பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7) நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். மேலும் தற்போது சுட்டும் விழி சுடரே (Suttum Vizhi Sudare) என்ற சீரியலின் நாயகியாகவும் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் நண்பரும், காதலனுமான லிங்கா என்பவருடன் அவருக்கு நிச்சயம் ஆகியுள்ளது. இது தொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நெல்சன் திலீப்குமாரின் பர்த்டே ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ஜெயிலர் 2 படக்குழு!

இணையத்தில் வைரலாகிவரும் வினுஷா தேவியின் நிச்சயம் தொடர்பான பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Its About Cinema (@itsaboutcinemas)

வினுஷாவிற்கு குவியும் வாழ்த்து :

வினுஷா, சமீபத்தில் சிம்பிளாக தனது நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளார். இந்நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. தனது நீண்டநாள் காதலரான லிங்கா என்பவரை நிச்சயம் செய்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் தங்களின் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும் விரைவில் இவர்கள் இருவரின் திருமணம் நடக்கவுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

வினுஷா தேவியின் சின்னத்திரை பயணம்:

நடிகை வினுஷா தேவி, கடந்த 2023ம் ஆண்டில் வெளியான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பின் அந்த நிகழ்ச்சியிலிருந்து கிட்டத்தட்ட 28 நாட்களிலே வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவரை பற்றிய தவறான பல பேச்சுக்கள் அடிபட்டது. நிக்சன் என்ற போட்டியாளர் இவரின் உடலை பற்றி தவறாக பேசியதாக, பல விமர்சனங்கள் எழுந்தது.

இதையும் படிங்க: விரைவில் ரூ 50 கோடி.. சமந்தாவின் எங்கள் தங்கம் பட 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இது குறித்து வினுஷாவும் பல நேர்காணலில் வெளிப்பாடியாக பகிர்ந்திருந்தார். இந்த விமர்சனங்களை அவர் எதிர்த்திருந்தார். இதையடுத்து பனிவிழும் மலர்வனம் மற்றும் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுவந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் அபிநயா என்ற வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us