Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதனின் பர்த்டே.. வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன டியூட் பட இயக்குநர்!
Pradeep Ranganathans Birthday : தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இன்று (25/07/2026) தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில், இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள், இயக்குநர் கீர்த்திஸ்வரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருந்த திரைப்படம் டியூட் (Dude). இதில் நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஹீரோவாக நடிக்க, இயக்குநர் கீர்த்தீஸ்வரன் (Keerthiswaran) இயக்கியிருந்தார். இயக்குநர் கீர்த்திஸ்வரன் ஏற்கனவே இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் இயக்குநராக நுழைந்த படம்தான் டியூட். இதில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ (Mamitha Baiju), சரத்குமார் மற்றும் ஹிருது போன்ற பல்வேறு பிரபலன்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து வெற்றியை கொடுத்தது. இப்படத்தை அடுத்ததக் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியில் முடிந்தது.
தற்போது, தயாரிப்பாளராக பிரதீப் ரங்கநாதன் புது படத்தை உருவாக்கிவருகிறார். அந்த வகையில், இன்று 2026ம் ஆண்டு ஜூலை 25ம் தேதியில், தனது 33வது பிறந்தநாளை அவர் கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில், இயக்குநர் கீர்த்தீஸ்வரன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: கருப்பு பட கதையை சூர்யா சார் சொல்லும் போது மிகவும் பிடித்தது – இயக்குநர் வெங்கி அட்லூரி
பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தீஸ்வரன் வெளியிட்ட வீடியோ:
happiest birthday to my dude and dearest bro PR 💥@pradeeponelife#dude pic.twitter.com/QB1Qz3J1CU
— Keerthiswaran (@Keerthiswaran_) July 25, 2026
இயக்குநர் கீர்த்திஸ்வரன், டியூட் பட காட்சி ஒத்திகையின்போது எடுத்த வீடியோவை வெளியிட்டு, இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். டியூட் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், டியூட் 2 படம் உருவாகுமா என்பது குறித்து இன்னு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் அடுத்த படம்:
இயக்குநர் கீர்த்தீஸ்வரன் டியூட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், தற்போது தொடர்ந்து புதிய படத்திற்கான கதையை எழுதிவருகிறார். இவர் தனது புது படத்தில், நடிகர் சிலம்பரசனுடன் இணைவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகை – வாமிகா கபி!
சிம்பு தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் பட ஷூட்டிங்கில் இருந்துவரும் நிலையில், இப்படத்தை முடித்ததும் இயக்குநர்கீர்த்தீஸ்வனின் இயக்கத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதன் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.