AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Air India Crash : ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியின் இருக்கை கோளாறு தான் காரணமா?.. மத்திய அரசு விளக்கம்!

Ahmedabad Air India Crash | குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், விபத்தின் காரணம் குறித்து அறிய, விமான கருப்பு பெட்டியில் இருந்து தகவல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கருப்பு பெட்டி தகவல் என வெளியாகும் ஒரு தகவலுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

Air India Crash : ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியின் இருக்கை கோளாறு தான் காரணமா?.. மத்திய அரசு விளக்கம்!
ஏர் இந்தியா விமான விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Jun 2025 07:40 AM IST

டெல்லி, ஜுன் 23 : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு (Ahmedabad Air India Crash) விமானியின் இருக்கையில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என தகவல் பரவி வரும் நிலையில்,  அது குறித்து மத்திய அரசு (Central Government) விளக்கம் அளித்துள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் (Black Box) இருந்து தகவலை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்ததாக வெளியாகி வரும் அந்த தகவலுக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்தாக கூறப்படும் தகவல் என்ன, அது குறித்து அரசு வெளியிட்ட விளக்கம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புறப்பட்ட ஒரு சில நொடிகளில் வெடித்து சிதறிய விமானம்

குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் மோதி கடும் விபத்துக்கு உள்ளானது. விமானம் விடுதியின் மீது மோதியதில் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானதால் விமானத்தில் பயணம் செய்தவர்கள் தீயில் கருகி பலியாகினர். விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது விபத்தில் A11 இருக்கையில் அமர்ந்திருந்த ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார்.

242 பேரில் 241 பயணிகள் பலி

விமான விபத்து – தொழில்நுட்ப கோளாறு காரணமா?

இந்த கொடூரமான விபத்து உலகையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவுமானத்திலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தகவலை பெறுவதற்கான அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருப்பு பெட்டியில் இருந்து தகவல் மீட்கப்பட்டதாகவும், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு தான் விபத்துக்கு காரணம் என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக, விமானம் புறப்பட்டு சென்றபோது விமானியின் இருக்கை பின்னோக்கி சென்றதாகவும், இதனால் விமானி கருவியை கட்டுப்படுத்த முடியாமல் பிடித்து இழுத்ததாகவும் இதன் காரணமாக என்ஜின் வேகம் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பார்த்த சக விமானி, விமானம் பறப்பதை கட்டுப்படுத்தும் கருவியை தனது கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ததாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியை தழுவிய அடுத்த சில நொடிகளில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள நம்ப வேண்டாம் – அரசு விளக்கம்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலக தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தகவல் தவறானது. இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us