AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Air India Crash : ஏர் இந்தியா விமான விபத்து.. இதுவரை 64 பேரின் உடல்கள் ஒப்படைப்பு!

Ahmedabad Air India Flight Crash | அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை டிஎன்ஏ மாதிரிகள் மூலம் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், உடல்களை கண்டறியும் பணியில் முதற்கட்டமாக 64 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவர் ரஜ்னிஷ் படேல் தெரிவித்துள்ளார்.

Air India Crash : ஏர் இந்தியா விமான விபத்து.. இதுவரை 64 பேரின் உடல்கள் ஒப்படைப்பு!
ஏர் இந்தியா விமான விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Jun 2025 17:11 PM IST

சென்னை, ஜூன் 17 : அகமதாபாத் (Ahmadabad) ஏர் இந்தியா விமான விபத்தில் (Air India Flight Accident) உயிரிழந்தவர்களில் 64 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களின் உடல்கள் தீயில் கருகிய நிலையில், உறவினர்களின் டிஎன்ஏ மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை கண்டறியும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில், முதற்கட்டமாக 64 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய விமானம்

ஜூன் 12, 2025 அன்று மதியம் 1 மணி அளவில் குரஜாத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதிய நிலையில், விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பிய நிலையில், விமானத்தில் பயணம் செய்த சுமார் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நொடி பொழுதில் வெடித்து சிதறிய விமானம்

இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் எரிந்து உடல் கருகிய நிலையில், உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சோதனை செய்து, அதன் பின்னர் உடல்கள் அடையாளம் காணப்படும் என கூறப்பட்டது. அதன்படி, கடந்த சில நாட்களாக உடல்களை அடையாளம் காணப்படும் பணிகள் நடைபெற்ற நிலையில், 64 உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ரஜ்னிஷ் படேல்

டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 99 உடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 87 பேரின் அடையாளம் தெரியவந்துள்ள என்றும் அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கூடுதல் காண்னாணிப்பாளர் டாகர் ரஜ்னிஷ் படேல் தெரிவித்திருந்தார். இதில் 64 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us