20 ஆண்டுகளுக்கான வீட்டு கடனை வெறும் 12 ஆண்டுகளில் அடைக்கலாம்.. எப்படி தெரியுமா?
Repay The 20 Years Home Loan Within 12 Years | வீட்டு கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் பலரும் தவிப்பர். இந்த நிலையில், இந்த ஒரு முக்கிய அம்சத்தை பின்பற்றுவதன் மூலம் 20 ஆண்டுகளுக்கான வீட்டு கடனை வெறும் 12 ஆண்டுகளில் முடிக்கலாம்.
இந்தியர்களை பொருத்தவரை வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது மிகப்பெரிய கனவாக உள்ளது. இதற்காக பலரும் தேர்வு செய்யும் முறை தான் வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் (Home Loan). சொந்த வீடு கனவு நினைவாக போகிறது என்கிற ஆர்வத்தில் பலரும் வீட்டு கடனை வாங்கி விடுகின்றனர். ஆனால், அதனை திருப்பி செலுத்தும்போது தான் அவர்கள் மிகப்பெரிய சவால்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கான வீட்டு கடனை 12 ஆண்டுகளிலேயா அடைத்து பல லட்சங்களை சேமிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறிய முயற்சி பெரிய லாபத்தை தரும்
வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும்போது ஆரம்பத்தில் அதன் வட்டி மட்டுமே குறையும். எனவே இந்த சூழலில் ஒரு ஒரு சிறிய மாற்றம் செய்வதன் மூலம் பெரிய லாபத்தை பெற முடியும். அதாவது ஒரு ஆண்டுக்கு 12 தவணைகள் செலுத்தும் பட்சத்தில் கூடுதலாக ஒரு தவணை செலுத்த வேண்டும். அவ்வாறு கூடுதலாக செலுத்தும் தவணை பணம் அசலில் கழியும். இவ்வாறு செய்வதன் மூலம் 20 ஆண்டுகளில் அடைக்க வேண்டிய வீட்டு கடனை நீங்கள் வெறும் 15 ஆண்டுகளில் அடைத்துவிட முடியும்.
இதையும் படிங்க : மார்ச் 31-க்கு எல்பிஜி கேஒய்சி.. ஸ்டிரிக்டாக சொன்ன அரசு.. ஆன்லைனில் கேஒய்சி மேற்கொள்வது எப்படி?




மாத தவணையை அதிகரித்தல் பெரிய உதவி செய்யும்
கடனை திருப்பி செலுத்தும் காலத்தில் உங்களது மாத சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க மாத தவணையை அதிகரிப்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது நீங்கள் மாதம் திருப்பி செலுத்தும் மாத தவணையில் இருந்து 5 சதவீத தொகையை அதிகரித்தால் 20 ஆண்டுகள் செலுத்த வேண்டிய கடன் வெறும் 12 ஆண்டுகளிலேயே முடிவடைந்துவிடும். அவ்வாறு செய்வதன் மூலம் ரூ.50 லட்சம் கடனில் 9 சதவீதம் வட்டி விகிதத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரை மிச்சம் செய்ய முடியும்.
இதையும் படிங்க : பிபிஎஃப் கணக்கு திறக்க போறீங்களா?.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
நீண்ட காலம் திருப்பி செலுத்தும் அளவை கொண்டு வங்கிகளில் கடன் வாங்கும்போது வங்கிகள் அதிக லாபத்தை பெறுகின்றன. எனவே தான் இந்த முறையை பின்பற்றும்போது நீங்கள் செலுத்தும் வட்டி குறைந்து உங்களால் பணத்தை பெரும் அளவு சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.