ஓய்வு காலத்தை நிதி சிக்கலற்றதாக மாற்றும் 3 திட்டங்கள்.. இத படிங்க!
Three Investments To Make Retirement Better | ஓய்வு காலத்தில் நிதி சிக்கல்களை எதிர்க்கொள்வது பலரது பிரச்னையாக உள்ளது. இந்த நிலையில், இந்த மூன்று விஷயங்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்களது ஓய்வு காலம் நிதி சிக்கல் அற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானதாக உள்ளது பொருளாதாரம். நிலையான மற்றும் பாதுகாப்பான பொருளாதாரம் இல்லை என்றால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும். பணியில் இருக்கும் நபர்களுக்கே இந்த நிலை என்றால், பணி ஓய்வு பெற்ற பிறகு மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், சிறந்த லாபம் கொடுக்க கூடிய ஒரு மூன்று திட்டங்களில் முதலீடு செய்தால், ஓய்வு காலம் குறித்து எந்த வித கவலையும் இல்லாமல் இருக்க முடியும். அவை என்ன என்ன திட்டம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஓய்வு காலத்தை நிதி சிக்கலற்றதாக மாற்றும் 3 திட்டங்கள்
இந்த 3 முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதின் மூலம் ஓய்வு பெற்ற பிறகும் நிதி சிக்கல்கள் இல்லாமல் இருக்க முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் (Post Office Saving Schemes) மிகவும் முக்கியமானது தான் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Saving Scheme). இது ஓய்வு பெற்றவர்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதின் மூலம் ஒரு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். 5 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட இந்த திட்டத்தில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : தங்கம் ஏன் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியம் தெரியுமா?
வாடகை வருமானம் தரும் சொத்து
உங்களுக்கு சொந்தமாக இடமே, வீடோ இருந்தால் அதனை வைத்தும் வருமானம் பெற முடியும். இடத்தையோ அல்லது வீட்டையோ வாடகைக்கு கொடுத்து மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெற முடியும். எனவே பணியின் போதே இடத்திலோ அல்லது வீட்டிலோ முதலீடு செய்து பணி ஓய்வின் போது அதனை வாடகை விட்டு வருமானம் பெறலாம்.
இதையும் படிங்க : நிதி சுதந்திரத்தை அடைய இந்த 4 இலக்குகளை கடக்க வேண்டியது கட்டாயம்.. என்ன என்ன?
மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் மற்றொரு அட்டகாசமான திட்டம் தான் இந்த மாதாந்திர வருமான திட்டம் (MIS – Monthly Income Scheme). இந்த திட்டத்தில் ஒருவர் தனியாக ரூ.9 லட்சம் வரையும், கூட்டாக ரூ.15 லட்சம் வரையும் முதலீடு செய்ய முடியும். மொத்தம் ஐந்து ஆண்டுகள் கால அளவீடு கொண்டுள்ள இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.