Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸ் வீட்டில் ரூல்ஸை ஃபாலோ பண்ணாத பார்வதி… கடுப்பான வீட்டு தல கனி

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தொடர்ந்து வீட்டின் விதிகளை ஃபாலோ செய்யாமல் இருக்கும் பார்வதி. வீட்டின் தலையான கனி அவரிடம் கேள்வி கேட்கும்போது வீட்டில் உள்ள மற்றப் போட்டியாளர்களிடையே சண்டை வெடிக்கின்றது.

பிக்பாஸ் வீட்டில் ரூல்ஸை ஃபாலோ பண்ணாத பார்வதி… கடுப்பான வீட்டு தல கனி
பிக்பாஸ் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Oct 2025 10:59 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 18-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே சண்டையும் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வீட்டில் ரூல்ஸ் என்று எதை சொன்னாலும் அதற்கு எதிராக பார்வதி செயல்பட்டு வருகிறார். இது தொடர்ந்து மற்ற போட்டியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வருகின்றது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் முதலாவது வீட்டு தலையாக இருந்த துஷாரிடம் எதிர்த்து பேசுவது ரூல்ஸை ஃபாலோ செய்யாதது என எதை சொன்னாலும் சரியாக பதிலளிக்காமல் சண்டையிட்டு வந்தார். மேலும் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் டீலக்ஸ் வீட்டிற்கு இடையே இருக்கும் ரூல்ஸ்களையும் அவர் ஃபாலோ செய்ய மறுத்து வந்தார்.

அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள்தான் பிக்பாஸ் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு வேலை செய்ய வேண்டும். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து வேலை செய்ய பார்வதி மறுத்து வந்தார். ஆனால் பிக்பாஸ் டீலக்ஸ் வீட்டிற்கு பார்வதி சென்றபோது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை தனக்காக வேலை வாங்கினார். தொடர்ந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பார்வதி டீலக்ஸ் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்ய சொன்னால் வேண்டா வெறுப்பாக செய்யாமல் போட்டியாளர்களிடையே சண்டையிட்டு வருகின்றார்.

பிக்பாஸ் வீட்டில் ரூல்ஸை ஃபாலோ பண்ணாத பார்வதி:

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் ஃப்ரீ நாமினேஷன் பாஸிற்கான போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் குவாலிட்டி செக்கராக இருக்கும் பார்வதி மற்றும் திவாகர் மற்றவர்களை கடுப்பேற்றும் விதமாக பல வேலைகளை செய்து வருகின்றார். மேலும் வீட்டில் உள்ள ரூல்ஸ்களையும் பார்வதி ஃபாலோ செய்யாததால் வீட்டில் உள்ள அனைவரும் பார்வதிக்கு எதிராக பேசுகிறார்கள். இந்தநிலையில் தற்போது வெளியன புரோமோவில் மைக்கில் உள்ள பேட்டரியை மாற்ற சொல்லி பார்வதியிடம் பிக்பாஸ் கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து கனி கடுப்பாகி கத்துகிறார் வீட்டில் உள்ள எந்த ரூல்ஸையும் ஃபாலோ செய்வது இல்லை என்று. இதனால் பார்வதி மற்றும் கனி இடையே தொடர்ந்து சண்டை முற்றுகிறது. இதில் பார்வதிக்கு சப்போர்ட்டாக கம்ருதின் மற்றும் வினோத் இருவரும் பேசுகிறார்கள்.

Also Read… கவினின் மாஸ்க் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மின்சார கண்ணா படம் தோல்வியடைய இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்