கன்னகி நகர் என்றாலே ஒவ்வாமை… கார்த்திகாவுக்கு அரசு வேலை வேண்டும்… பா.ரஞ்சித் கோரிக்கை
Pa Ranjith : பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணியில் சென்னை கன்னகி நகரைச் சேர்ந்த கார்த்திகா முக்கிய பங்கு வகித்த நிலையில் அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பா.ரஞ்சித் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு விழா 2025 போட்டிகளில் இந்திய பெண்கள் கபடி (Kabbaddi ) அணி, இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்திய அணியின் வெற்றியில் சென்னை கன்னகி நகரைச் சேர்ந்த கார்த்திகா முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியை அடுத்து சமூக வலைதளங்களில் பலரும் கார்த்திகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் (Pa Ranjith) தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்திகாவுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, தமிழக அரசு கார்த்திகாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கார்த்திகாவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டு
இந்தியா சார்பில் தங்க வென்றுள்ள கபடி அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனையான கார்த்திகாவை வாழ்த்தி இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச் சேர்ந்த’ வீர மகள் கார்த்திகாவிற்கு வாழ்த்துகள் என்றார்.




இதையும் படிக்க : 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
கார்த்திகாவுக்கு பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்த பதிவு
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச்… pic.twitter.com/XlEz8NPct5
— pa.ranjith (@beemji) October 25, 2025
மேலும், கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.
இதையும் படிக்க : மகளிர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு..
கார்த்திகாவுக்கு அரசு வேலை வேண்டும்
பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.